»   »  தயாரிக்க வரும் சிம்ரன்

தயாரிக்க வரும் சிம்ரன்

Subscribe to Oneindia Tamil


யாரும் வாய்ப்பு கொடுக்காத விரக்தியில் இருந்து வந்த சிம்ரன், தானே தயாரித்து நடிக்க முடிவு செய்து விட்டார். இதுதொடர்பாக 2 இயக்குநர்களை அவர் அணுகியுள்ளார்.


பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தபோது, சிம்ரன் கால்ஷீட்டை வாங்க படாதபாடு பட்டனர் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். ஆனால் கல்யாணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கும் தாயான பின்னர் சிம்ரனை சீந்துவார் யாரும் இல்லை.

அவரும் உடம்பை டிரிம் செய்து கொண்டு சென்னையில் உட்கார்ந்து கொண்டு வாய்ப்புகளை அலசியபடிதான் இருக்கிறார். ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்க ரெடியாக இல்லை. மலையாளத்தில் கிடைத்த படத்தில் நடித்து, அதுவும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இனி கொஞ்ச நாளைக்கு மலையாளத்தில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் சிம்ரன்.

தெலுங்கில் ஒரே ஒரு படம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழில்தான் சதுத்தமாக சிம்ரனுக்கு வாய்ப்பில்லை. இதனால் பேசாமல் சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிக்கலாமே என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார் சிம்ரன்.

இதையடுத்து ஒரு கதையை ரெடி செய்துள்ள சிம்ரன் இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான இரண்டு இயக்குநர்களுடன் அந்தக் கதை குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறாராம். இந்தக் கதை ஓ.கே. ஆகி விட்டால் அதை சிம்ரனே தயாரிப்பார். அவர்தான் படத்தின் நாயகி.

இப்படத்தை தன்னுடன் சேர்ந்து தயாரிக்க ஒரு இணைத் தயாரிப்பாளரையும் எதிர்பார்க்கிறாராம் சிம்ரன்.

இந்தப் படமாவது சிம்ரனுக்கு மறு பிறவி கொடுக்க உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more about: producer, simran
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil