»   »  ராசக்காபாளையம் சிந்து

ராசக்காபாளையம் சிந்து

Subscribe to Oneindia Tamil

பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தில் சிந்து துலானி கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார்.

தனுஷின் மாபெரும் தோல்விப் படமான சுள்ளானில் சுண்டி இழுக்கும் இளமையுடன் அறிமுகமானவர் சிந்து துலானி. தனது முதல் படத்திலே படு குறைச்சலான ஆடையுடன் வந்து அசத்தி சென்றார் சிந்து.

இதனால் கோடம்பாக்கத்தில் பெரிய ரவுண்டு வருவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறாக ஒரு படத்திலும் புக் ஆகமால் மூலையில் முடங்கி கிடந்தார்.

இதையடுத்து கொஞ்ச இடைவெளிக்கு பின் அலையடிக்குது படத்தில் தனது தங்கையுடன் சேர்ந்து கிளாமரில் ஆட்டம் போட்டார். ஆனாலும் அதன் பின்னும் தமிழில் ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டார்.

இதனால் தெலுங்குக்குப் போன சிந்து விக்ரம் நடித்த மஜா படத்தில் கிடைத்த ஒரு குத்து பாட்டை ஏற்று ஆடிவிட்டுச் சென்றார்.

இப்படி நீண்ட நாளாக பட வாய்ப்பு இன்றி அலைந்த சிந்து துலானிக்கு இப்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ரஞ்சித் நடிக்க செல்வபாரதி இயக்கும் பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படம் தாய் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் சிந்து துலானிக்கு போட்டியாக மேகா நாயரும் கிளாமரில் பின்னி எடுத்து வருகிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil