»   »  ரெண்டு சினேகா!

ரெண்டு சினேகா!

Subscribe to Oneindia Tamil

புன்னகை இளவரசி சினேகா கையில் இப்போது தமிழில் இரண்டும், தெலுங்கில் இரண்டுமாக நான்கு படங்கள் உள்ளதாம்.

தமிழில் தட்டுத் தடுமாறி நடமாடிக் கொண்டிருக்கும் சினேகாவுக்கு தெலுங்கில் மார்க்கெட் பரவாயில்லையாம். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மகாரதி சூப்பர் ஹிட் ஆகி விட்டதால் அவரைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தனவாம்.

ஆனால் அவற்றிலிருந்து இரண்டு படங்ளை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளாராம். மகாரதிக்குப் பிறகு கிட்டத்தட்ட 6 படங்கள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்து விட்டேன். நல்ல கதையாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன்.

இப்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். தமிழிலும் இரண்டு படங்கள் உள்ளன. சம்பளத்தை விட திருப்திதான் எனக்கு ரொம்ப முக்கியம் என்கிறார் சினேகா.

தெலுங்கில் சினேகா நடிக்கும் இரு படங்களில் ஒரு படத்தில் ஹீரோ ஸ்ரீகாந்த். இவர் தமிழ் ஸ்ரீகாந்த் அல்ல, தெலுங்கு ஹீரோ. ராமநாயுடுதான் இப்படத்தைத் தயாரிக்கிறார். முப்பலனேனி சிவா இயக்குகிறார்.

ஏற்கனவே ஸ்ரீகாந்த்தும், சினேகாவும் ராதாகோபாலம், எவண்டே ஸ்ரீவரு ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil