»   »  சிம்புவை மறுத்த சினேகா

சிம்புவை மறுத்த சினேகா

Subscribe to Oneindia Tamil

சிம்புவின் காளை படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சினேகா வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம்.

வில்லங்க ரோல்களில் நடிப்பதை சிலர் தவிர்ப்பார்கள். சிலர் துணிந்து நடித்து துவட்டி எடுத்து விடுவார்கள். சினேகா முதல் ரகம். சர்ச்சையைக் கிளப்பும் என்று நினைத்தால் அந்த ரோல்களில் நடிக்க மறுத்து விடுவார் சினேகா.

தொடர்ந்து செலக்ட்டிவாக நடித்து வருவதால்தான் இந்த கிளாமர் போட்டியிலும் கூட சினேகாவால் நிலைத்து நிற்க முடிகிறது. அவர் நடித்த ஒரே சர்ச்சைக்குரிய வேடம் புதுப்பேட்டை படத்தில் வரும் விபச்சாரப் பெண் வேடம்தான்.

ஆனாலும் கூட அந்த ரோலை மிக அருமையாக செய்து பாராட்டுக்களைப் பெற்றார் சினேகா. விபச்சாரப் பெண் வேடம் என்பதற்காக ஆபாசமாகவோ அல்லது அருவறுப்பாகவோ அவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில்தான் சமீபத்தில் அவரைத் தேடி ஒரு சர்ச்சை கேரக்டர் வந்ததாம். அதாவது சிம்புவின் காளை படத்தில் நடிக்கும் வாய்ப்புதான் அது. கொஞ்சம் வில்லங்கமான ரோலாம் அது. அதாவது விரகதாபம் கொண்ட பெண்மணியாக நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறவே, அய்யய்யோ வேண்டாம் சாமி என்று மறுத்து விட்டாராம் சினேகா.

இதுவரை எந்தவித சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாமல் நடித்து வருகிறேன். இந்தக் கேரக்டரில் நடித்தால் தேவையில்லாத சலசலப்புகள் ஏற்படும் என்று கூறி மறுத்து விட்டாராம் சினேகா.

இதையடுத்துத்தான் அந்த கேரக்டருக்கு உயிர் சங்கீதாவை புக் செய்தாராம் சிம்பு. சங்கீதாவுக்கு இதுபோன்ற சவாலான, சர்ச்சையான ரோல் என்றால் இப்போது திருநெல்வேலி அல்வாவை திகட்டத் திகட்ட சாப்பிடுவது போல இருக்கிறதாம்.

வித்தியாசமான ரோல்களில் நடிப்பேன், அதற்காக விரசமான, ஆபாசமான ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கும் சங்கீதா, இப்போது தனம், எவனோ ஒருவன் ஆகிய படங்களில் சூப்பர் கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

உயிரை மிஞ்சுமா காளை?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil