»   »  ஸ்னேகா பிறந்த நாள்!

ஸ்னேகா பிறந்த நாள்!

Subscribe to Oneindia Tamil


புன்னகை இளவரசி ஸ்னேகா தனது பிறந்த நாளை ஹைதராபாத்தில் இன்று சிறப்பாக கொண்டாடினார்.

Click here for more images

தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் ஸ்னேகாவுக்கு தனி இடம் உண்டு. புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் வாரிசு என்று கூறும் அளவுக்கு தனது அழகுப் புன்னகையால் தமிழ் கூறும் நல்லுலகை வசீகரித்தவர் ஸ்னேகா.

ஸ்னேகாவுக்கு இன்று பிறந்த நாள் (எத்தனையாவது பிறந்த நாள் என்றுதான் தெரியவில்லை). இன்று அவர் அடவிஷு என்ற தெலுங்குப் படப்பிடிப்பில் இருந்ததால் தனது பிறந்த நாளை செட்டிலேயே கொண்டாடினார்.

படத்தின் நாயகனான அருண் (பிரபல தயாரிப்பாளர் தாசரி நாராயண ராவின் மகன்) மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் புடை சூழ பிறந்த நாளைக் கொண்டாடினார் ஸ்னேகா.

ஸ்னேகாவுக்கு தட்ஸ்தமிழ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டுப் பேசினோம்.

ஸ்னேகா கூறுகையில், எனது அக்காவுடன் நான் ஹைதராபாத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் எனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன்.

அம்மா, அப்பா, அப்புறம் எனது ஊர் சென்னையை விட்டுப் பிறந்த நாளைக் கொண்டாடுவதை நினைத்து ஏக்கமாக உள்ளது. இருந்தாலும் அதற்காக வருத்தப்படவில்லை. எனது அப்பாவும், அம்மாவும் நான் ஹைதராபாத்துக்குக் கிளம்பும் முன்பே என்னை வாழ்த்தி விட்டனர். பிறந்த நாள் பரிசாக ஒரு வைர மோதிரத்தையும், பிரேஸ்லெட்டையும் கொடுத்தனர்.

என்னைப் பொருத்தவரை தொழில்தான் முதலில், பிறகுதான் மற்றவை எல்லாம். இந்த பிறந்த நாளை சாக்காக வைத்து எனது ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார் ஸ்னேகா.

பிறந்த நாளையொட்டி ஹைதராபாத்தில் தனது நெருங்கிய நண்பர்கள், திரையுலகினருக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் ஸ்னேகா.

Read more about: sneha
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil