»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சேரன் இயக்கி, நடித்து வரும் ஆட்டோகிராப் படத்தில் அவருக்கு ஜோடியாக புதிய ஹீரோயின் கோபிகா நடித்துவருகிறார். இப்போது இன்னொரு ஹீரோயினாக ஸ்னேகாவும் நடிக்கப் போகிறார்.

இந்தப் படத்தில் சேரனுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் என்று தெரிகிறது. இதில் கோபிகாவுடன்கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்துவிட்டார் சேரன். அவர் தொடர்பான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன.

இப்போது தான் ஸ்னேகாவின் கால்ஷீட் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதனால் அடுத்த ஷெட்யூலில் ஸ்னேகாதொடர்பான காட்சிகளை பிடித்துத் தள்ளப் போகிறார்களாம். இதன் பின்னர் அடுத்த ஹீரோயின் நடிப்பாராம்.

தொடர்ந்து 3க்கும் மேற்பட்ட காதல் தோல்விகளைச் சந்திக்கும் ஒரு இளைஞனின் கதையாம் இது.முதல் காதலி கோபிகா, இரண்டாவது ஸ்னேகா, மூன்றாவது இன்னொருவராம்.

இதில் கடைசியில் ஒருவரைக் கைப்பிடிப்பாராம் சேரன்.

மடிசார் மாமி கிரண்!!

நியூ படத்தில் சிம்ரன் கிட்டத்தட்ட சாப்ட் போர்ன் பட ஹீரோயின் மாதிரி நடித்து வருகிறார்.ஒண்ணுமே தெரியாத கணவருக்கு காதல் முதல் சகல கலைகளையும் சொல்லித் தரும் வேடம்சிம்ரனுக்கு.

இதில் டைரக்டர்-கம்-நடிகர் சூர்யாவும், சிம்ரனும் லிப் டு லிப் கிஸ் கொடுப்பது போன்ற ஸ்டில்கள்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் படம் முழுவதும் ஏகத்துக்கும் கிளு கிளு சீன்கள்உள்ளனவாம்.

சிம்ரனின் கவர்ச்சி போதாது என்று இப்போது கிரணையும் பிடித்துப் போட்டிருக்கிறார் சூர்யா. இதில்கிரணுக்கு மாமி ரோல். மடிசார் ஸ்டைல் என்ற பெயரில் அந்தப் புடவைக்கு உள்ளமரியாதையையே கெடுக்கும் வகையில் அரைகுறையாக சேலை கட்டிக் கொண்டு திரியும்கேரக்டராம் கிரணுக்கு.

இந்தப் படத்தில் சூர்யாவுக்காக ஏங்கும் மாமியாம் கிரண்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil