»   »  விடாது துரத்திய ஸ்ட்ரெஸ்... தீபிகா படுகோனே ’விளையாடி’ ஜெயித்த கதை!

விடாது துரத்திய ஸ்ட்ரெஸ்... தீபிகா படுகோனே ’விளையாடி’ ஜெயித்த கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது, விளையாட்டு மூலமாக மீண்டு வந்ததாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் தீபிகா படுகோனே. அடுத்தடுத்து இவரது படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் பாலிவுட்டில் வெற்றிப்பட நாயகியாக கொண்டாடப்படுகிறார்.

தற்போது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

பேஸ்புக்...

பேஸ்புக்...

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அதிலிருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பதையும் தனது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மன அழுத்தம்...

மன அழுத்தம்...

அதில் அவர், "இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். மன அழுத்தத்துக்குள் நான் மூழ்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அந்த நிலையில் இருந்து வெளியேற கடுமையாக போராடினேன். அந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற கையறு நிலையில் தவித்தேன்.

வீராங்கனை...

வீராங்கனை...

ஆனால், எனது அப்போதைய நிலையை போராடி வெல்லும் பலத்தை எனக்குள் இருந்த ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரிய ஆற்றல் ஊக்குசக்தியாக அமைந்தது. பேட்மின்டன் விளையாட்டு தெரிந்திருந்ததால் தோல்விகளை கையாள மட்டுமின்றி, வெற்றியை கையாள்வது எப்படி என்பதையும் விளையாட்டு கற்றுத் தந்தது. எனக்கு பணிவையும், அடக்கத்தையும் அது கற்றுத் தந்தது.

அப்பாவின் அட்வைஸ்...

அப்பாவின் அட்வைஸ்...

எந்த நிலையிலும் இருந்து மீள்வது எப்படி? எதையும் எதிர்த்து போராடுவது எப்படி? என்பதை கற்றுத் தந்ததுடன் அந்த ஊக்கம்தான் என்னை வழிநடத்தி செல்கிறது. எந்த துறையிலும் சிறந்தவராக விளங்க ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்று எனது தந்தை அடிக்கடி கூறுவார்.

விளையாட்டு அவசியம்...

விளையாட்டு அவசியம்...

எனவே, ஒவ்வொரு இளைஞரும், இளம்பெண்ணும், ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். எனது வாழ்க்கையை மாற்றிய விளையாட்டு உங்களது வாழ்க்கையையும் மாற்றும்" என தீபிகா அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Deepika Padukone has revealed sports has changed her life and even taught her to fight with her two-year long depression.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil