நீ எனக்கு தங்கச்சி மாதிரி.. ஸ்ரீதேவி சகோதரியை படு அப்செட்டாக்கிய அஜித்.. மனிதர் தெளிவு

சென்னை: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அவரது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றாலும்; பொதுவான ரசிகர்களை படம் கவரவில்லை. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதாக பேசப்பட்டாலும்; அந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகளும் திரைத்துறையில் பலமாகவே எழுந்திருக்கின்றன. இந்நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பார்க்கலாம்.

அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். இந்த வருடத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாகின. அவற்றில் முதலில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த அடியை அந்தப் படம் வாங்கியது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தார் ஏகே. அதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

இதுவும் சுமார் ரகம்தான்: குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு சீனிலும் ஏகே மாஸ் காண்பித்திருக்கிறார்; ஆதிக் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார் என அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள். படமும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து கெத்து காண்பித்தது. இருப்பினும் படம் பார்த்த பொதுவான ரசிகர்கள் குட் பேட் அக்லியை கழுவி ஊற்றினார்கள். இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கே சாபக்கேடு என்று துவைத்து எடுத்தார்கள்.

Sridevi Sister Maheswari Talks about Ajithkumar Here are Details
Photo Credit:

கார் ரேஸில் கவனம்: இதற்கிடையே அஜித்துக்கு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதினை அறிவித்திருந்தது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சேவைக்காகவும், கார் ரேஸில் ஜொலித்துவருவதாலும் அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் திரைத்துறை மற்றும் கார் ரேஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதைவிடவும்; ரேஸ் இல்லாத காலகட்டத்தில் மட்டுமே நடிப்பதற்கு முடிவு செய்திருக்கிறார் ஏகே.

அடுத்த படம்: அவர் அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படம் வசூல் ரீதியாக அடி வாங்கியது போன்று இந்தப் படமும் வந்துவிடக்கூடாது என்பது ஏகே ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது. அதேசமயம் இந்தப் படம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை; அநேகமாக வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் அஜித் நடிக்கலாம் என்ற பேச்சுக்களும் எழுந்திருக்கின்றன.

மகேஸ்வரி பேட்டி: இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் சகோதரியும், உல்லாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவருமான நடிகை மகேஸ்வரி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'உல்லாசம் படத்தில் நடித்தபோது அஜித் மீது எனக்கு பெரிய க்ரஷ் இருந்தது. அடுத்தடுத்து அவருடன் பணியாற்றும் வாய்ப்புகளும் அமைந்தன. உல்லாசம் ஷூட்டிங்கின் கடைசி நாளில் அவரை சந்திக்க முடியாமல் இருந்தது. அப்போது திடீரென அவரே என்னிடம் வந்து நீ எனக்கு தங்கை மாதிரி என்று சொல்லிவிட்டார். அது அப்செட்டாக இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X