»   »  ஜப்பானின் ஆய்சி திரைப்பட விழாவில் கலக்கிய ஸ்ரீதேவி!

ஜப்பானின் ஆய்சி திரைப்பட விழாவில் கலக்கிய ஸ்ரீதேவி!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜப்பானின் ஆய்சி திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு ஜப்பான் பெண்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளதாம்.

ஸ்ரீதேவியின் படம் இதுவரை ஜப்பானில் திரையிடப்பட்டதில்லை. இந்த நிலையில் அவரது இங்கிலீஷ் விங்கிலீஷ் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஆனால் படம் வருவதற்கு முன்பே பட விழாவில் அவரது படம் கலக்கி விட்டதாம்.

செப்டம்பர் 1ம் தேதி நடந்த ஆய்சி திரைப்பட விழாவில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரையிடப்பட்டபோது அதற்கு பெண்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு கிடைத்ததாம்.

சூப்பர் ஸ்டாரின் முத்து

சூப்பர் ஸ்டாரின் முத்து

இந்திய நடிகர்களைப் பொறுத்தமட்டில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டுமே ஜப்பானில் பெரும் திரளான ரசிகர்கள் உள்ளனர். அவரது முத்து படம் அங்கு பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

ஸ்ரீதேவிக்கு செம வரவேற்பு

ஸ்ரீதேவிக்கு செம வரவேற்பு

இந்த நிலையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் ஜப்பானில் திரையிடப்படும்போது அவருக்கு பெண் ரஜினிகாந்த் என்ற பெயர் கிடைக்கும் அளவுக்கு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நம்மளை மாதிரியே பேசுதே தேவி

நம்மளை மாதிரியே பேசுதே தேவி

ஆசியப் பெண்கள் பொதுவாக வெளிநாட்டு ஆங்கிலத்தை சரளமாக பேசுவதில் சிரமப்படுவார்கள். அதேபோலத்தான் ஜப்பான் பெண்களும். இங்கிலீஷ் விங்கிலீஷ் கதையும் கிட்டத்தட்ட இதேதான் என்பதால் ஜப்பான் பெண்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போய் விட்டதாம்.

தேவியைப் பார்க்கனும்

தேவியைப் பார்க்கனும்

பட விழாவில் ஸ்ரீதேவி படத்தைப் பார்த்து அவரது ரசிகையாகி விட்ட ஜப்பான் பெண்கள் தற்போது ஸ்ரீதேவியை நேரில் பார்க்கத் துடிக்கிறார்களாம். படம் திரைக்கு வரும்போது கண்டிப்பாக ஸ்ரீதேவி ஜப்பானுக்கு வர வேண்டும் என்று அவர்கள் அன்புடன் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

தேவி பைத்தியங்கள்

தேவி பைத்தியங்கள்

படத் தயாரிப்பாளர் பால்கி இதுகுறித்துக் கூறுகையில், எதிர்பாராத அளவுக்கு இப்படத்திற்கு இங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஜப்பான் பெண்ணுக்கும், ஸ்ரீதேவியைப் பிடித்து விட்டது. இந்தப் படம் ஜப்பானியர்களைக் கவர்ந்து விட்டது.

பிரமாண்ட ரிலீஸ்

பிரமாண்ட ரிலீஸ்

ஜப்பான் முழுவதும் பெரிய அளவில் இப்படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளோம். ரஜினி படத்திற்குப் பிறகு ஒரு இந்தியப் படத்திற்கு ஜப்பானில் வரவேற்பு கிடைத்துள்ளது இந்தப் படத்திற்குத்தான்.

ஸ்ரீதேவி வந்தாகனும்

ஸ்ரீதேவி வந்தாகனும்

ஸ்ரீதேவியைப் பார்க்க இங்குள்ள பெண்கள் துடியாத் துடிக்கிறார்கள். எனவே அவர் கண்டிப்பாக வர வேண்டும் என்று இவர்களுடன் சேர்ந்து நானும் கோரிக்கை விடுக்கிறேன் என்றார் சிரித்தபடி...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Not since Rajinikanth has an Indian actor made the impact that Sridevi has in Japan -- thanks to a preview and festival screening of her comeback film English Vinglish. What's more, the film has not even been released there as yet! Apparently, the theme of an Asian woman struggling with the English language has struck a universal chord in Japan. And the Japanese women, themselves driven to despair by the linguistic discrepancies of the diaspora, have embraced the film in a big way. Now, they want to meet Sridevi before the film gets a Japanese release in December.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more