»   »  அப்போ தாமினி.. இப்போ ஸ்ரீஷா

அப்போ தாமினி.. இப்போ ஸ்ரீஷா

Subscribe to Oneindia Tamil

கெட்-அப்ப மாத்தி, செட்-அப்ப மாத்தி, அப்பன் வச்ச பேர மாத்தி என்ற பாடலுக்கு அப்படியே பொருந்துவார்ஸ்ரீஷா.

சொந்த ஊர் பெங்களூர், சொந்த பேர் தாமினி. கன்னடத்தில் 20 படங்களில் ஹோம்லி கேரக்டர்களில் நடித்தவர்,அப்படியே தெலுங்கில் தலைகாட்டிவிட்டு தமிழில் அறிவுமணி படத்தில் அறிமுகமானார். ரொம்ப சாதுவாகநடித்துவிட்டு மீண்டும் பெங்களூருக்கே போனவர் இப்போது அதிரடியாய் திரும்பி வந்துள்ளார்.

இப்போது இவரது பெயர் ஸ்ரீஷா, தமிழில் ஹோம்லி கேர்டர் செய்ய நிறைய பேர் இருக்காங்க, நான் வந்திருப்பதுகவர்ச்சியில் புதிய பரிணாமம் காட்டத் தான் என்கிறார்.

பண்டரிபாய் காலத்தில் ஆரம்பித்து சரேஜா தேவி மூலமாக நிலை நின்று, பூஜா, குட்டி ராதிகா, ரம்யா, பிரேமா,ஷெரீன், சாயா சிங், கெளசல்யா, ரக்ஷிதா தமிழில் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் கன்னட நடிகைகளின்ஊர்வலத்தில் லேட்டஸ்ட் வரவான ஸ்ரீஷா கன்னடத்தில் 20 படங்களில் நடித்திருந்தாலும் பெங்களூரிலேயேஇவரை யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்குத் தான் கன்னட சினிமா இருக்கிறது.

இதனால் அங்கு நடித்து, காசும் பார்க்க முடியாமல், பேரும் சேர்க்க முடியாமல் தவிக்கும் நடிகைகள் வழக்கமாய்செய்வது முதலில் ஆந்திராவுக்கும், அப்புறம் தமிழகத்துக்கும் வரிசை கட்டுவது தான். அதே பார்முலாவின்படி தான்கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் ஸ்ரீஷா.

விஷன் 21 கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் காதல் செய்ய விரும்பு என்ற படத்தில் ஹீரோயினாகநடிக்கப் போகிறார். காவ்யாஞ்சலி, கல்யாணி போன்ற வெற்றிகரமான டிவி சீரியல்களை எடுத்த இந்த நிறுவனம்இப்போது சினிமா தயாரிப்பில் இறங்குகிறது.

ஹீரோவாக சந்தோஷ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அந்தகால பிரபல இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மகன் ராம் தான் படத்துக்கு இசையமைக்கிறார்.

என்ன யூஸ் பண்ணுடா, ரகசிய தோழா என அர்த்தம் பொதிந்த பாடல்களை எழுதியுள்ளார் அறிமுகபாடலாசிரியரான யுரேகா. படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா ஏவிம் ஸ்டுடியோவில் நடந்தது.

ஸ்டுடியோ என்னவோ சென்ட்ரலைஸ்ட்ஏசி செய்யப்பட்டு தான் இருந்தது. ஆனால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்எல்லோரையும் சூடாக்கிவிட்டது ஸ்ரீஷா போட்டு வந்த உடை. டிரஸ்சிங் ரூமில் இருந்து பாதியில் மறந்து போய்வந்துவிட்டாரோ என்று தோன்றச் செய்யும் விதத்தில் உள்ளாடை அளவிலான ஒரு உடையை வெளியே அணிந்துவந்திருந்தார்.

படத்தில் எப்படி நடிக்கப் போகிறார் என்பதை கோடம்பாக்கம் ஆட்களுக்கு புரிய வைக்கவும், எப்படியும்நடிப்பேன் என்ற சிக்னல் தரவும் தான் ஸ்ரீஷா, ஏதோ ஹாலிவுட் ப்ரீமியர் ஷோவுக்கு வருவது மாதிரி சிக்கனமானடிரஸ்சில் வந்திருக்க வேண்டும். அவரது முயற்சி வெல்கிறதா பார்ப்போம்.

ஆடியோ கேசட்டை வெளியிட்ட கையோடு படத்தின் டிரெய்லரையும் காட்டினார்கள். அதில் அதிகம்இடம்பிடித்திருந்தது ஸ்ரீஷாவின் டாப் ஆங்கிள் ஷாட்கள் தான். கேமராமேன், டைரக்டரின் விருப்பம் உணர்ந்துமிக அதிகப்படியாகவே ஒத்துழைத்திருக்கிறார் ஸ்ரீஷா. மகா கிளாமர்.

ஷெரீனுக்கு ஒரு இன்னொரு துள்ளுவதோ இளமை மாதிரி, ஸ்ரீஷாவுக்கு ஒரு காதல் செய்ய விரும்பு என்கிறதுபடத்தின் யூனிட்.. படத்தின் இயக்குனர் பெயர் பகவான். இவர் முன்பு ரவீந்திரன் என்ற பெயரில் வெல்டன்படத்தை இயக்கியவர்.

முன்பே அறிவுமணியில் நடித்தது பற்றியோ, தமிழில் இது இரண்டாவது ரவுண்ட் என்பது பற்றியோ வாயேதிறக்கவில்லை நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீஷா. அதே போல தயாரிப்பாளர்கள் தரப்பிலும் ஸ்ரீஷாவை புதுமுகம்போலவே காட்ட முயற்சித்தார்கள்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் படத்தில் ஸ்ரீஷாவோடு இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர் பெயர்அஸ்விதா. படத்தில் அவருக்கு என்ன வேலை தெரியுமா?

ஸ்ரீஷாவுக்கு போட்டியாய் கவர்ச்சி காட்டுவது தான்...!!

Please Wait while comments are loading...