»   »  ஸ்ரீஷா Vs

ஸ்ரீஷா Vs

Subscribe to Oneindia Tamil

காதல் செய்ய விரும்பு படத்தில் அறிமுகமாகும் அஸ்விதா ஒரு கிரிக்கெட் வீராங்கனையாம். பெங்களூரைச் சேர்ந்த இவர் மாநிலஅளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவராம்.

அதில் விளையாடிய நேரம் போக மாடலிங் பக்கம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவரை கன்னடத் திரையுலகம் கை நீட்டிஅழைக்க அதில் நடிக்கப் போனார். ஆனால், பண விஷயத்தில் கன்னடத்தில் பெரிய அளவில் ஏதும் தேறாததால் தமிழில் நடிக்கநீண்ட காலமாக முயற்சித்து இப்போது வெற்றி கண்டிருக்கிறார்.

காதல் செய்ய விரும்பு ஹீரோ சந்தோஷ் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் என்பது தெரிந்த விஷயம் தான். வேலை போரடிக்கவேசினிமா சான்ஸ் தேடி அலைந்து இந்த வாய்ப்பை கப் என்று பிடித்தவர்.

நல்லெண்ணெய் சித்ரா, மணிவண்ணன், கருணாஸ், வையாபுரி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தைத் தயாரிப்பது சாலைமைத்ரி. படத்துக்கு இசை மறைந்த பழம்பெரும் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மகன் ஜீராம்.

பார்கவன் இயக்கும் இந்தப் படத்தின் ஹைலைட்டே ஸ்ரீஷா தான் என்றால் அது தவறில்லை. கன்னடத்தில் உபேந்திராவுடன்ஹீரோயினாக அறிமுகமாகி மடமடவென 20 படங்கள் நடித்தவர்.

இவரா அவரு என்று எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சினிமா நெளிவு சுளிவுகளை மிக வேகமாகக் கற்றுக்கொண்டு முன்னேற்றப் பாதையில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடை போட்டவர் ஸ்ரீஷா என்ற தாமினி.

தமிழில் இது இரண்டாவது படம். ஆனால், தனக்கு இது தான் கடைசி படம் என்பது மாதிரி தாராள தரிசனம் தந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

பொள்ளாச்சி, ஊட்டி என குளிர்ப் பகுதிகளில் சூட்டிங் நடக்கிறது. ஒரு பக்கம் ஸ்ரீஷா இன்னொரு பக்கம் அஸ்விதா என சூட்டிங்ஸ்பாட்டில் கதகதப்புக்கு குறைச்சலே இல்லை. வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஹீரோ சந்தோஷ்.

அஸ்விதா, எள் என்றால் எண்ணெயாக நிற்கிறார். ஸ்ரீஷாவோ ரீபைண்ட் ஆயிலாக நிற்கிறார். இருவருக்கும் கேரமா முன் முழுதரிசனம் காட்டுவதில் அத்தனைப் போட்டி.

பாடல் காட்சிகளுக்காக இவர்களை அழைத்துக் கொண்டு லண்டனுக்குப் போக இருக்கிறார்கள்.

படத்தின் கதை என்னவோ, அம்மா அப்பா சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது என்ற மையக் கருத்தை வைத்துத் தான்நகர்கிறது. ஆனால், படத்தில் கல்லூரி மாணவி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுவது உள்பட மகா பேஜாரான காட்சிகள் எல்லாம்உண்டாம்.

படத்தில் காட்டல் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதால், சென்சார் போர்டுவாலாக்களின் கத்திரிக்கு நிச்சயம் பெரிய இரைகாத்திருப்பதாக சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இந்தப் படமே இன்னும் முடியாத நிலையில் ஸ்ரீஷா தனது அடுத்த பட வேட்டையிலும் தீவிரமாகிவிட்டார். தமிழில் கோலோச்சும்கன்னட உலகைச் சேர்ந்தவர்களை வளைத்து, வாய்ப்புகளைப் பெற மாத்தாடி (பேசி) கொண்டிருக்கிறார்.

இது ரொம்ப ஸ்பீடா தெரியல ஸ்ரீஷா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil