»   »  'வில்லி' ஆனார் சுஜா!

'வில்லி' ஆனார் சுஜா!

Subscribe to Oneindia Tamil
Suja
குத்தாட்ட நாயகியாக பல படங்களில் ஆடிக் கொண்டிருக்கும் சுஜா, இப்போது வில்லியாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

பிளஸ்டூ என்ற படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் சுஜா. அப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்த சுஜாவுக்கு, நாயகி வாய்ப்பை விட குத்தாட்ட வாய்ப்பே அதிகம் தேடி வந்தது.

வருவது வரட்டும் என்ற தீர்மானத்துடன் குத்துப்பாட்டுக்களுக்கு ஆட ஆரம்பித்தார் சுஜா. இப்போது கை நிறையப் படங்களுடன் குத்தாட்டம் ஆடி வரும் சுஜாவைத் தேடி வில்லி வாய்ப்பு வந்துள்ளது.

வடிவேலு 2ம் முறையாக நாயகனாக நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில்தான் வில்லி வேடம் பூண்டுள்ளார் சுஜா.

சுஜாவின் அட்டகாசமான வில்லத்தனத்தைப் பார்த்து இப்போது சரத்குமாரின் வைத்தீஸ்வரன் படத்தில் அவருக்கு தங்கச்சி கேரக்டரைக் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர்.

கவர்ச்சிக்கு எல்லையே வைத்துக் கொள்ளாத சுஜாவின் தீரத்தைப் பார்த்து இப்போது தெலுங்கில் இவருக்கு நாயகி வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதாம்.

நாயகியாக வெற்றிக் கொடி நாட்ட நினைத்த சுஜா அதைத் தவிர மற்ற வாய்ப்புகளெல்லாம் வந்து குவிவதைப் பார்த்து சந்தோஷப் பூரிப்புடன் நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil