»   »  கொளுத்தும் வெயிலில் நடிப்பது ரொம்பக் கஷ்டம்... புலம்பும் அனுஷ்கா

கொளுத்தும் வெயிலில் நடிப்பது ரொம்பக் கஷ்டம்... புலம்பும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக உள்ளது என நடிகை அனுஷ்கா தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி வெற்றியால் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா வலம்வருகிறார்.

கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வசூலைக் குவித்த பாகுபலி படத்தின் 2 வது பாகத்தில் அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார்.

பாகுபலி 2

பாகுபலி 2

முந்தைய பாகத்தில் அனுஷ்காவை அடிமையாக இயக்குநர் ராஜமௌலி காட்டியிருந்தார். அதற்குப் பரிகாரமாக இப்பாகத்தில் கலர்புல் ஆடைகள், கிரீடங்கள் அணிந்து இளவரசியாக அனுஷ்கா ஜொலிக்கவுள்ளார். மேலும் பிரபாஸ்-அனுஷ்கா காதல் காட்சிகளுக்கும் இப்படத்தில் நிறைய முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட்டெரிக்கும் வெயில்

சுட்டெரிக்கும் வெயில்

அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தரையில் ஆம்லேட் போடுமளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலுக்கு பாகுபலி குழுவினரும் தப்பவில்லை.

இளவரசி

இளவரசி

இது குறித்து நடிகை அனுஷ்கா ''பாகுபலி 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இளவரசி வேடத்தில் நடித்து வருகிறேன். அதற்காக கிரீடம், நகைகள் அணிந்து நடித்து வருகிறேன். இந்த வெயிலில் மன்னர் கால மேக்கப் போட்டு நடிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.

ரசிகர்களின் வரவேற்பு

ரசிகர்களின் வரவேற்பு

என்னுடைய கதாபாத்திரம் திரையில் தோன்றும்போது ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை நினைத்து இந்தக் கஷ்டங்களை பொறுத்துக் கொள்கிறேன். மற்றொருபுறம் சிங்கம் 3 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஒரு சாதாரண பெண்ணாக நடிக்கிறேன். 'அருந்ததி', 'ருத்ரமாதேவி' பாணியில் எனக்கு முக்கியத்துவம் உள்ள படமொன்றில் விரைவில் நடிக்கவிருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Baahubali 2: "Put on Makeup in the Summer Shooting it is Very Difficult" Anushka Says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil