»   »  நான் நடிப்பிலும், டான்ஸிலும் தேறிட்டேன் தெரியுமா?: சன்னி லியோன்

நான் நடிப்பிலும், டான்ஸிலும் தேறிட்டேன் தெரியுமா?: சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏக் பஹேலி லீலா படத்தில் தான் நடிப்பிலும், நடனத்திலும் தேறிவிட்டதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் அவர் பாட்டுக்கு வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடிப்பதும், தயாரிப்பதுமாக பிசியாக இருந்தார். இந்நிலையில் தான் இந்தி நடிகை பூஜா பட் சன்னி லியோனை மும்பைக்கு அழைத்து வந்து ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்க வைத்து பாலிவுட் நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தார்.

அதன் பிறகு சன்னி பாலிவுட்டிலேயே செட்டிலாகி நடித்து வருகிறார். அவ்வப்போது பிற மொழிப் படங்களிலும் குத்தாட்டம் போட்டு வருகிறார். ஏன் தமிழில் கூட வடகறி படத்தில் குத்தாட்டம் போட்டார்.

நடிப்பு

நடிப்பு

ஜிஸ்ம் 2 படம் ரிலீஸானபோது அதை பார்த்தவர்கள் சன்னிக்கு உடம்பை காட்ட மட்டும் தான் தெரிந்துள்ளது. நடிப்பு என்பது என்னவென்று கூட தெரியவில்லை என்று விமர்சித்தனர். இதை சவாலாக எடுத்துக் கொண்ட சன்னி, நடிப்பில் தேறிக் காட்டுகிறேன் என்று கூறினார்.

படங்கள்

படங்கள்

ஜிஸ்ம் படத்தை அடுத்து அவர் ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ் ஆகிய இரண்டு இந்தி படங்களில் நடித்துவிட்டார். அந்த படங்களிலும் அவர் ஆடை குறைப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நடிப்புக்கு அளிக்கவில்லை என்றே விமர்சிக்கப்பட்டது.

ஏக் பஹேலி லீலா

ஏக் பஹேலி லீலா

பாபி கான் இயக்கியுள்ள ஏக் பஹேலி லீலா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் சன்னி லியோன். அந்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிக்கையில் நடிப்பு, நடனம் என பலவற்றை தான் கற்றுக் கொண்டுள்ளதாக சன்னி தெரிவித்துள்ளார். தான் நடிப்பு மற்றும் நடனத்தில் தேறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மார்வாடி

மார்வாடி

ஏக் பஹேலி லீலா படத்தில் சன்னி வழக்கம்போல் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் மார்வாடிகளின் மொழியை கற்றுள்ளாராம். இந்த படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் தனது நடிப்பை பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறார் சன்னி.

English summary
Actress Sunny Leone, who is gearing up for the release of "Ek Paheli Leela", says the audience will see her growth as an actor in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil