»   »  நடிகை செலினா ஜேட்லியின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சன்னி லியோன்

நடிகை செலினா ஜேட்லியின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை சன்னி லியோன் தனது வீட்டை சேதப்படுத்தியதால் பாலிவுட் நடிகை செலினா ஜேட்லி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் பாலிவுட்டில் நடித்து எனக்கும் நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்தே தீருவேன் என்ற முடிவில் மும்பையில் தங்கியுள்ளார். அவருக்கு தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால் அவரைத் தேடி மிக கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே வருகின்றன.

இந்நிலையில் தான் சன்னி லியோனுக்கு வீட்டு பிரச்சனை எழுந்துள்ளது.

செலினா

செலினா

சன்னி லியோன் ஒரு ஆபாச பட நடிகை என்பதால் அவருக்கு மும்பையில் வீடு வாடகைக்கு கொடுக்க மக்கள் தயங்கியுள்ளனர். இதை பார்த்து சன்னி மீது பரிதாபப்பட்ட பாலிவுட் நடிகை செலினா ஜேட்லி தனது வீட்டை அவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

சன்னி

சன்னி

2 ஆண்டு ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதம் நிறைவடைந்தும் சன்னியும், அவரது கணவர் டேனியல் வெப்பரும் வீட்டை காலி செய்யவில்லை. மாறாக வீட்டில் சிசிடிவி கேமராக்கள் வைக்க சுவரில் துளை போட்டு, செலினாவின் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தியும் உள்ளனர்.

ஓடிப் போ

ஓடிப் போ

வீட்டை காலி செய்ய மறுத்த சன்னி லியோனை உடனே அங்கிருந்து வெளியேற்றியுள்ளார் செலினா என்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஹோட்டல் ஒன்றில் தங்கிய சன்னி தற்போது ஜுஹு பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மறுப்பு

மறுப்பு

குப்பை செய்தி பற்றி எல்லாம் கருத்து தெரிவிக்க முடியாது. நாங்கள் கடந்த ஓராண்டு காலமாக ஜுஹுவில் உள்ள ஃபிளாட்டில் வசிக்கிறோம். லீசு முடிந்தவுடன் நாங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம் என்று சன்னி தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆபாச பட நடிகையான சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும் என்றும், அவரை மீண்டும் இந்தியாவுக்குள் நுழையவிடக் கூடாது என்றும் கூறி இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்து அமைப்பு போலீசில் புகார் அளித்தது. அந்த அமைப்பின் புகாரின்பேரில் சன்னி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Sunny Leone, who starred in Prem's DK and has been roped in for Indrajit Lankesh's Luv U Alia, who was earlier living in Celina Jaitley's house in Mumbai on rent, has rubbished rumours that she was asked to leave for the way she was keeping it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil