»   »  27 விதமான பிகினி உடைகளில் சன்னி லியோன்.. மஸ்திஜாதே படுத்தும் பாடு

27 விதமான பிகினி உடைகளில் சன்னி லியோன்.. மஸ்திஜாதே படுத்தும் பாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் நடித்து வரும் மஸ்தி ஜாதே படத்தில் சுமார் 27 விதமான பிகினி உடைகளை அணிந்து நடிக்கவிருக்கிறாராம் நடிகை சன்னி லியோன்.

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் சன்னி லியோனையும் கவர்ச்சியையும் என்று கூறலாம் அந்த அளவிற்கு தனது கவர்ச்சியால் காண்பவர்களைக் கிறங்கடிப்பவர் சன்னி லியோன்.

சன்னி சாதாரணமாக பிகினி அணிந்தாலே அது செய்தியாகி விடுகையில் 27 விதமான பிகினிகளை அவர் அணிந்து நடிப்பது உண்மையில் பெரிய செய்திதான்.

Sunny Leone use 27 Bikinis for Mastizaade

மஸ்தி ஜாதே

கவர்ச்சிக் கன்னி சன்னி லியோன் தற்போது மஸ்தி ஜாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சன்னி லியோனின் உடைகள் முழுவதுமே வெறும் பிகினிகள் தானாம். இதைக் கேட்டு சன்னி சற்று கலங்க போனால் போகிறதென்று படக்குழுவினர் ஒரு செட் ஷார்ட்ஸ் உடைகளையும், ஒரு டாப்பையும் அளித்திருக்கின்றனர்.

ஒன்றா ரெண்டா 27 பிகினிகள்

மஸ்தி ஜாதே படம் முழுவதும் சுமார் 27 விதமான பிகினி உடைகளை அணிந்து சன்னி லியோன் நடிக்கவிருக்கிறார்.இதற்காக அவர் கடுமையான

டயட்டை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

குளமாகிய சன்னி கண்கள்

இதனைக் கேட்டு சன்னி லியோனின் கண்கள் குளமாகின என்றும் அவர் முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு சிங்கிள் ஷாட் கூட நடிக்காமல் வெளியேறியதாகவும் கூறுகின்றனர்.

சமாதானம் செய்த குழுவினர்

மஸ்தி ஜாதே படத்தின் இயக்குநர் மிலாப் சவேரி மற்றும் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அவரை சமாதானப்படுத்தி, பிகினியில் அழகாகத் தோன்ற டயட்டை மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறியிருக்கின்றனர்.

2 வேடங்களில்

இந்தப் படத்தில் சன்னின் லியோன் லைலா மற்றும் லில்லி என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.இந்தப் படத்தின் சிறப்பு கருதி தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடுமையான டயட்டை மேற்கொண்டு வருகின்றனராம். அடுத்த ஆண்டு ஜனவரி 29 ம் தேதி மஸ்தி ஜாதே படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny Leon's Next Movie Mastizaade she is used 27 Different Bikini's, this movie may be Released on January 29 (2016).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil