»   »  கல்லூரியில் தமன்னா

கல்லூரியில் தமன்னா

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கல்லூரி படத்தில் என்னைத் தவிர எல்லாருமே புதுமுகங்கள்தான். ஆனால் பிரமிக்க வைத்துள்ளார்கள் என்கிறார் படத்தின் நாயகியான தமன்னா.

'கேடி' படத்தின் 'லீட் லேடி'யாக அறிமுகமான தமன்னா, அதற்குப் பிறகு நடித்த ஒரே படம் 'வியாபாரி'. இடையில் சில தெலுங்குப் படங்களிலும் தலைகாட்டினார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

என்ன செய்தால் கோலிவுட் கோட்டையில் ஜெயிக்கலாம் என்று மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, 'காதல்' புகழ் இயக்குநர் பாலாஜி சக்திவேலிடமிருந்து அழைப்பு வந்தது. அவ்வளவுதான், சந்தோஷத்தில் தனது கால்ஷீட் டைரியையே எஸ் பிக்சர்சிடமே எடுத்துக் கொடுத்து விட்டார்.

'கல்லூரி' படம் வெளிவரும் வரை வேறு புதுப்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்ட தமன்னாவின் சின்ஸியாரிட்டியைப் பாராட்டிய இயக்குநர், எஸ் பிக்சர்ஸின் அடுத்த படத்திலும் கதாநாயகி வாய்ப்பை தமன்னாவுக்கே வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

'கல்லூரி ' படத்தின் அனுபவங்களை சமீபத்தில் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் தமன்னா.

என்னைப் பொறுத்தவரை கல்லூரிதான் என்னுடைய கேரியரில் முதல் படம். அந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. பாலாஜி சார் நிஜமாகவே ஒரு கல்லூரி பேராசிரியர் மாதிரி பொறுமையாக, ஆனால் கச்சிதமாக கற்றுத் தருகிறார். இந்தப் படத்தில் ஹீரோ அகில் உள்பட எல்லாருமே புதுமுகங்கள்தான்.

என்னையும் ஒரு புதுமுகமாக கருதிக்கொண்டுதான் இந்தப் படத்தில் நடிக்கிறேன். கல்லூரியில் படிக்கும் ஒரு சிறிய நகரத்துப் பெண் வேடம் எனக்கு. என்னுடைய தோற்றம் எனக்கே புதிதாக உள்ளது இந்தப் படத்தில்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் சார். ஆனால் நான் இதுவரை அவரை கல்லூரி செட்டில் பார்த்த்தே இல்லை. அப்படி ஒரு நம்பிக்கை இந்தப் படத்தின் மீது அவருக்கு. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற இயக்குநருக்கு எங்களால் முடிந்த பங்களிப்பைத் தருவோம். எஸ் பிக்சர்ஸின் அடுத்த படத்திலும் நான்தான் நாயகி என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. பேசிக் கொண்டிருக்கிறார்கள். செய்தி உறுதியானதும் தெரிவிக்கிறேன்.

இந்தப் படத்துக்காக மூன்று படங்களை மறுத்து விட்டேன். இதை மலிவான விளம்பரத்துக்காக நான் குறிப்பிடவில்லை. கல்லூரிக்குப் பின் நான் முழுநேர தமிழ் நடிகையாகிவிடுவேன்...என்றார்.

நல்ல நம்பிக்கைகள் என்றுமே வீணாவதில்லை!

Read more about: kallori, tamanna

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil