»   »  தமன்னாவின் 'தாண்டவம்'

தமன்னாவின் 'தாண்டவம்'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
அழகுப் புயல் தமன்னா, சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'ஆனந்த தாண்டவம்' மூலம் கலக்க வருகிறார்.

கேடி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் தமன்னா. அதற்கு முன்பு அவர் விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கேடி படம் அவரது கட்டழகுக்கு சரியான அங்கீகாரத்தைக் கொடுத்தது. இதையடுத்து விறுவிறுவென சில படங்களில் நடித்தார்.

வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடி போட்டார். ஆனால் என்னவோ அதன் பின்னர் தமன்னாவைத் தேடி பட வாய்ப்புகள் பாய்ந்தோடி வரவில்லை. இதனால், தமன்னாவும் கவலைப்படவில்லை. மாறாக விளம்பரங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு தமன்னாவைத் தேடி ஆனந்த தாண்டவம் என்ற படம் வந்துள்ளது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். சித்தார்த் என்ற புதுமுகம்தான் ஹீரோ. ஏற்கனவே ஒரு சித்தார்த் நாயகனாக உள்ளதால், இந்த சித்தார்த்தின் பெயரை மாற்ற யோசித்து வருகிறார்களாம்.

ஊட்டியில் முகாமிட்டு வசனக் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஸ்பெஷல் எபக்ட்ஸ் காட்சிகளில் கலக்கிக் ெகாண்டிருக்கும் வெங்கி இப்படத்தில் தமன்னாவின் அப்பாவாக நடிக்கிறார். அம்மா வேடத்தில் நடிப்பவர் அமிர்தா. இவர் கனா கண்டேன் படத்தில் விவேக்குடன் சேர்ந்து காம ரசம் சொட்டும் காமெடிக் காட்சிகளில் கலக்கியவர்.

இப்படத்தில் தமன்னா தனது முழுத் திறமைகளையும் கொட்டி நடிக்கிறாராம்.

தாண்டவம் தமன்னாவுக்கு ஆனந்தம் தந்தால் சரித்தான்!

Read more about: tamanna

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil