»   »  நம்ம சொப்பனசுந்தரிகள்லாம் என்னென்ன வெச்சிருக்காங்கன்னு தெரியுமா?

நம்ம சொப்பனசுந்தரிகள்லாம் என்னென்ன வெச்சிருக்காங்கன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

"அண்ணே... சொப்பனசுந்தரி வெச்சிருந்த காரை நாம வெச்சிருக்கோம். அந்த சொப்பனசுந்தரியை இப்ப யாரு வெச்சிருக்காங்க?" இது கரகாட்டகாரனில் செந்தில் கவுண்டமணியிடம் கேட்டு உதை வாங்கும் சந்தேகம். முதல்ல நம்ம சொப்பனசுந்தரிகள், அதாவது நம்ம கனவுக்கன்னிகள் என்னென்ன கார் வெச்சிருக்காங்கன்னு லிஸ்ட் எடுப்போமா?

நயன்தாரா

நயன்தாரா

கனவுக் கன்னின்னா அதுல முதல் இடம் நம்ம நயனுக்கு தானே? லேடி சூப்பர் ஸ்டார் பிஎம்டபிள்யு எக்ஸ்5 வெச்சிருக்காங்க... இதை அவங்க 2008லயே வாங்கிட்டாங்களாம். நயன்தாராவை நாம தான் 9தாரான்னு எழுதுறோம்னு நினைச்சுட்டு இருக்கோம்ல? அவங்களுக்கே ராசி நம்பர் 9 தானாம். அதனால காருக்கு பார்த்து பார்த்து 9 கற நம்பரை வாங்கியிருக்காங்க. இனி 9 ம் நம்பர் பிஎம்டபிள்யுவை பார்த்தா உள்ளே பாருங்க... நயன் இருந்தாலும் இருக்கலாம்.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

நம்ம பப்ளி ஹன்சிகா வாங்கியிருக்கறது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்ல செடான் கார். சின்ன வயசுலேருந்தே கார் வாங்குற ஆசை இருந்ததாகவும், இப்ப சொந்த சம்பாத்தியத்துல கார் வாங்கினது ரொம்பவே ஹேப்பின்னும் சொல்லியிருக்காங்க. 2012ல கார் வாங்கின இவங்களுக்கும் ராசி நம்பர் 9 தானாம். நிறைய காசு கொடுத்து அந்த நம்பரை வாங்கியிருக்காங்க...

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிக்கு ஃபேவரிட் ரேஞ்ச்ரோவர் எவோக். அப்பா கமலும் அதே கார்தான் வெச்சிருக்கார். ஸ்ருதி வாங்கியிருப்பது ஒன்றரை கோடில ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்ஸ் மாடல்.

சமந்தா

சமந்தா

நயன்தாரா வெச்சிருக்கற அதே மாடல் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 சீரிஸ் கார் தான் சமந்தாவும் வாங்கியிருக்காங்க... அதே 9 தான் இவங்களுக்கும் ராசி நம்பராம். அது மட்டும் இல்லாம ஒரு ஜாக்குவார் எக்ஸ்.எஃப் காரும் வாங்கியிருக்காங்க. ரெண்டுமே தெலுங்கானா ரெஜிஸ்ட்ரேஷன். ரெண்டுக்கும் ஒரே நம்பர் 3888 தான்.

நமீதா

நமீதா

கவர்ச்சி புயல் நமீதாகிட்டயும் பிஎம்டபிள்யூ இருக்கு. ஆனா 3 சீரிஸ் மாடல். அதாவது 5, 7 சீரிஸ்லாம் வர்றதுக்கு முன்னாடியே வாங்கிட்டாங்க. வாங்கும்போது இதோட விலை 30 லட்சம். லோக்கல் யூஸுக்காக ஒரு ஈகோ ஸ்போர்ட்ஸ் வைத்திருக்கிறார்.

த்ரிஷா

த்ரிஷா

ஆல்டைம் குயின் த்ரிஷாவும் பிஎம்டபிள்யூ பிரியை தான். இவங்க 5 சீரிஸ் வந்த புதுசுலயே வாங்கிட்டாங்க.

குஷ்பூ

குஷ்பூ

குஷ்பூ வெச்சிருக்கறது ஆடி க்யூ5 எஸ்.யூ.வி. இது அவங்க கணவர் சுந்தர்.சி கிஃப்டா கொடுத்தது. அதனால இதை மாத்தாம அப்படியே வெச்சிருக்காங்க. ஒருமுறை பஸ்ல மோதி ஆக்சிடெண்ட் ஆகி உயிர் பிழைச்சவர் குஷ்பூ. இந்த கார் ரொம்ப சேஃப்டிகறதாலயும் இதையே வெச்சிருக்காங்க.

சினேகா

சினேகா

சினேகாகிட்ட இருக்கறது ஆடி ஏ6. 2009 மாடலான இந்த கார் சினேகாவுக்கு பிறந்தநாள் பரிசாக வந்தது.

அஞ்சலி

அஞ்சலி

அஞ்சலிக்கும் ஃபேவரிட் பிஎம்டபிள்யூ தான். சித்தி வாங்கிக் கொடுத்ததால அவர்கிட்டயே திருப்பி கொடுத்துட்டதா வந்த செய்திகள்ல உண்மை இல்லையாம். ஃபேவரிட் கார்கறதால அஞ்சலியை இந்த காரை பயன்படுத்திகிட்டு இருக்கார். பிஎம்டபிள்யூல 3 சீரிஸ் ஜிடி கார் இது.

English summary
Here is the list of our Tamil cinema heroines favorite cars.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil