»   »  மீண்டும் ஒரு மிஸ் சென்னை.. தனுஜா

மீண்டும் ஒரு மிஸ் சென்னை.. தனுஜா

Subscribe to Oneindia Tamil
த்ரிஷா வழியில், இன்னொரு மிஸ் சென்னை நடிகையாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களை கலக்கோ கலக்கென்று கலக்கிக் கொண்டிருக்கும் த்ரிஷா, மிஸ் சென்னை அழகியாக தேர்வுசெய்யப்பட்டு மாடலிங்குக்குப் போய் அப்படியே மிஸ் கோலிவுட்டாக, பட்டம் சூட்டப்படாத ராணியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

அவரது வழியில் ஒரு விலாங்கு மீன் கோலிவுட் குளத்தில் குதித்திருக்கிறது. அதன் பெயர் தனுஜா. முன்னாள் மிஸ் சென்னைஆயிற்றே இதனால், த்ரிஷாவைப் போலவே கிடார் கம்பி மாதிரி இருப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். பி.எஸ்.என்.எல்.கேபிள் மாதிரி உருண்டு திரண்டு இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் இவரும் சிக் என்று இருந்தாராம், மிஸ் சென்னையாக தேர்வான பிறகு சினிமா வாய்ப்புக்களும்வந்ததாம். ஆனால், தனுஜாவுக்கு அப்போது நடிக்கும் ஆசையே இல்லையாம்.

இதனால் தொடர்ந்து படிக்கப் போய்விட்டார். அதுவும் வக்கீலுக்கு. படித்து முடித்த கையோடு பிராக்டீஸ் செய்யலாமா என்றுயோசித்துக் கொண்டிருந்தவரைப் பிடித்து நடிக்க இழுத்து வந்து விட்டார்கள். அப்படி வந்த வாய்ப்புதான், இப்படிக்கு என் காதல்என்ற படம்.

இந்தப் படத்தில் தனுஜாதான் நாயகி.

தனுஜாவைப் பார்த்தால் புதுமுக நடிகை போலத் தெரியவில்லை. நன்றாக வாயாடுவதோடு, கவர்ச்சி விஷயத்தில் டபுள் ஓகேசொல்லியிருக்கிறார்.

டூயட் காட்சிகளில் ரொம்ப டேக் எல்லாம் வாங்காமல், ஹீரோவுடன் டேக் இட் ஈஸியாகவே ஆடி, ஓடி, உருண்டு, புரண்டுகலக்கியுள்ளார். டிரஸ் விஷயத்திலும் டைரக்டர் மனம் கோணாமல், படு சூட்டிகையாக கொடுத்ததை போட்டுக் கொண்டு வந்து,தரிசனம் தந்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பூனை மீசையுடன் சாலை ரவி என்பவர் நடித்துள்ளார். இவர் எப்படி ஹீரோ ஆனார் என்றுஆச்சரியப்படுகிறீர்களா?. அவங்க அப்பா ரவிசங்கர் தானே தயாரிப்பாளர்.

படத்தில் ரஜினி லெவலுக்கு மகனுக்கு பில்ட்-அப் கொடுக்கச் சொல்லிவிட்டாராம். இதனால் படம் முழுக்க பாட்டு, பைட்டு எனரொம்ப பிஸி இந்த ரவி.

சரி, கதை?. ஒரு வாத்தியார் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும்சொல்வது தான் கதையாம். வாத்தியாராக லிவிங்ஸ்டன் நடிக்க, ரொம்ம்ம்ம்....ப நல்ல பையனாக ரவி நடிக்கிறார்.

ஹீரோயின் தனுஜா தன்னைப் பற்றி தானே வர்ணிப்பதைக் கேட்போமா?

எனக்கு வெளிப்படையாக பேசத்தான் தெரியும். எதையும் பூடகமாக பேச மாட்டேன். முன்பு நான் (இன்னும்!!!!) ஸ்லிம்மாகஇருந்தேன். இப்போ கொஞ்சம் குண்டடித்து விட்டேன். இருந்தாலும் பரவாயில்லை, உடம்பைக் குறைப்பது எனக்கு ரொம்ப ஈசி,கவர்ச்சி, தேவையான அளவு காட்டுவதில் தப்பேயில்லை.

எனக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ், அதற்கு எனது வீட்டில் எந்தத் தடையும் இல்லை, நல்ல நட்புக்கு யார் தடை போட முடியும்,சொல்லுங்கள்?.... என்றார்

என்னத்தை சொல்ல..?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil