Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தேள் கொட்டிய தெலுங்கு நடிகையின் உண்மை சம்பவங்கள்.. காட்டுக்குள் என்ன நடந்தது?
ஹைதராபாத்: சினிமா ஷூட்டிங்கில் நடக்கும் சில பல உண்மையான நிகழ்வுகள், சில நேரத்தில் சாமானியர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தும்.
பிரபலங்கள் எது செய்தாலும் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவதும், அதை பற்றி விவாதிப்பதும் சமீபகாலமாக நெட்டிசன்களுக்கு அன்றாட வேளைகளில் ஒன்றாகி விட்டது.
சமீபத்தில் தெலுங்கு நடிகை ஹீனா, காலா என்ற இசை வீடியோவுக்காக தெலுங்கானா காடுகளில் படப்பிடிப்பில் இருக்கும் போது தேள் கடிக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கர்
நாயகன்
ஏ.ஆர்.ரஹ்மானுடன்
நேரடியாக
பேசுங்கள்..
குஷியில்
ரசிகர்கள்

தேள் கடித்தது
தேள் நடித்த ஹீனாவுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து விஷம் ஏறாமல் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஹீனா சொன்னது என்னவென்றால், "படப்பிடிப்பின் போது காட்டில் பாம்புகள் இருந்தன, அவற்றைத் தவிர்க்க முயன்றேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேள் கடித்துவிட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு திரும்பியதும், தயாரிப்பாளர்கள் எனக்கு ஓய்வு கொடுக்க விரும்பினர், ஆனால் நான் படப்பிடிப்பை தொடர விரும்பினேன் என்று கூறினார்.

மியூசிக் வீடியோ
காலா என்ற மியூசிக்கல் வீடியோ , கோவா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அழகிய இடங்களில் ஒளிப்பதிவாளர் பார்கவ் ரவாடாவால் படமாக்கப்பட்டது. அழகான நடிகை ஹீனா எஸ் இடம்பெறும் இந்த பாடலை நன்கு அறியப்பட்ட பாடகி நேஹா கரோட் பாடியுள்ளார். கேஎம்ஆர் கார்ப்பிரசன்டேஷன் மற்றும் பிளேபேக் என்டர்டெயின்மென்ட் புரொடக்ஷன் தயாரிக்க, கேவி சித்தார்த்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார். சேஷு கேஎம்ஆ இசை அமைக்க, எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை சூர்யா ரெட்டி எஸ்எஸ் செய்துள்ளார், ராஜ் குமார் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

சம்பவம் நடந்தது
உண்மையான காடுகளில் ஷூட்டிங் எடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும், நல்ல வேலை அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இவரது காலா பாடல் பிரபலமாகிவருவது குறிப்பிடத்தக்கது.

பாம்பு கடித்த சல்மான்
சல்மான் கான் தனது நண்பர் என்றும், அவருக்கும் எனக்கும் ஒரே ஒற்றுமை என்று கூறிய ஹீனா, அவருக்கு பாம்பு கடித்தது, எனக்கு தேள் கடித்துள்ளது. என்று கூறி பண்ணை வீட்டில் சல்மான் கானுக்கு பாம்பு கடிதத்தை நினைவு படுத்தினார். திரைத்துறை பிரபலங்களுக்கு இது போல் சம்பவங்கள் நடப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.