»   »  இதான் த்ரிஷா வெற்றியின் ரகசியம்!

இதான் த்ரிஷா வெற்றியின் ரகசியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷா.. பதிமூன்று ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாகத் திகழ்கிறார். சமீப காலத்து சினிமாவில் இவ்வளவு ஆண்டுகள் தாக்குப் பிடித்த முதல் நடிகை இவராகத்தான் இருக்கும்.

தனிப்பட்ட முறையில் மிகவும் தனிமை விரும்பி... தன் தோழிகள், நெருக்கமான நண்பர்களைத் தவிர வேறு யாருடனும் அத்தனை சீக்கிரம் பழகாதவர் என்றாலும், நடிப்பு என்று வந்துவிட்டால் நூறு சதவீதம் கொடுத்த வார்த்தையை, போட்ட ஒப்பந்தத்தை மதிப்பவர் என்ற பெயர் த்ரிஷாவுக்கு உண்டு.

லயன்

லயன்

அதற்கு ஒரு உதாரணம் சமீபத்தில் நடந்தது. லயன் என்ற தெலுங்குப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் லயன்.

98வது படம்

98வது படம்

இன்னொரு நாயகியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். சத்யதேவ் இதனை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா போலீஸாக நடித்துள்ளார். நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மணிசர்மா இசையமைத்துள்ளார். ருத்ரபதி ரமணா ராவ் தயாரித்திருக்கிறார்.

மே 1 முதல்

மே 1 முதல்

தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

இப்படத்தில் நடிகை த்ரிஷாவிற்கும், நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும் நெருக்கமான முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாம்.

இதுபற்றி இயக்குனர் சத்யதேவ், த்ரிஷாவிடம் ஒப்பந்தம் போடும்போதே கூறியிருந்தாராம். ஆனால் இதுவரை அந்தக் காட்சியை எடுக்காமல் இருந்திருக்கிறார்.

மறுப்பின்றி...

மறுப்பின்றி...

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் தறுவாயில்தான் இந்த முத்தக்காட்சி பற்றி தெரிவித்திருக்கிறார். ஒருவேளை த்ரிஷா மறுத்தால், வேறு டூப் வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தாராம். ஆனால் த்ரிஷாவோ மறுப்பு எதுவும் சொல்லாமல் அந்த காட்சியை நடித்து கொடுத்தாராம்.

பாராட்டு

பாராட்டு

இதனால்தான் திருமணம் நிச்சயம் ஆன பிறகும் த்ரிஷாவின் மவுசு குறையவில்லை. முன்பை விட இன்னும் பிசியாக அவர் நடித்துக் கொண்டிருக்கிறார், எனப் புகழ்கிறது லயன் யூனிட்!

English summary
Recently Trisha has performed a liplock scene with Telugu star Balakrishna for Lion movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil