»   »  தெருநாய்களைக் கொல்வது இரக்கமற்ற செயல்- மோகன்லாலுக்கு த்ரிஷா பதிலடி

தெருநாய்களைக் கொல்வது இரக்கமற்ற செயல்- மோகன்லாலுக்கு த்ரிஷா பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:தெரு நாய்களைக் கொல்வது இரக்கமற்ற செயல் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.

மலையாள நடிகர் மோகன்லால் தெரு நாய்களைக் கொல்லுங்கள் அவை மனிதர்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்று சிலதினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை விடுத்தார்.

இதற்கு நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தார், இந்த நிலையில்,நேற்று ஒரு சகலகலா வல்லவன் படவிழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை த்ரிஷா "தெரு நாய்களைக் கொல்லுவது இரக்கமற்ற செயல்" என்று நடிகர் மோகன்லாலுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

தெரு நாய்கள் பற்றி மட்டும் கருத்து தெரிவிக்காமல் தனது சொந்த வாழ்வு குறித்தும் த்ரிஷா நிறைய பகிர்ந்து கொண்டார் அவற்றை இங்கே பார்ப்போம்...

தெரு நாய்களைக் கொல்வது இரக்கமற்ற செயல்

தெரு நாய்களைக் கொல்வது இரக்கமற்ற செயல்

தெரு நாய்களைக் கொல்வது என்பது ஈவு இரக்கமற்ற ஒரு செயல், அவைகளை பத்திரமான இடத்தில் கொண்டு போய் விடலாம்.

என் வீட்டுக்கு அருகே அலையும் 10 நாய்கள்

என் வீட்டுக்கு அருகே அலையும் 10 நாய்கள்

என் வீட்டுக்கு அருகில் கூட 10 தெரு நாய்கள் அலைகின்றன அவைகளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட ஏற்பாடு செய்திருக்கிறேன்.

திருமணம் முடிந்து போன கதை

திருமணம் முடிந்து போன கதை

வருண் மணியனுக்கும் எனக்கும் நடக்க இருந்த திருமணம் முடிந்து போன கதை, இதில் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனவே அதனைக் கிளற வேண்டாம்.

திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது

திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது

அதேசமயம் திருமணத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, எனக்குப் பொருத்தமான நபர் கிடைத்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.

லிவிங்டூகெதெர்

லிவிங்டூகெதெர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது வாழ்பவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது, இதில் எனது கருத்து ஏதுமில்லை.

காதல் இல்லாமல் எதுவுமில்லை

காதல் இல்லாமல் எதுவுமில்லை

காதல் ஒரு அழகான உணர்வு, காதல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. எனக்கும் 2, 3 முறை காதல் வந்திருக்கிறது.

அரசியலில் ஈடுபடுவீர்களா?

அரசியலில் ஈடுபடுவீர்களா?

அரசியல் ஒன்றும் மோசமான விஷயம் கிடையாது, முழுமையாகத் தெரிந்து கொள்ள ஆசைதான். ஆனால் எனக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது எனவே தற்போதைக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை.

நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை

நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை

நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன், இயக்குநர் வெங்கட் பிரபு இது தொடர்பாக எங்கள் இருவரிடமும் கேட்டு இருக்கிறார் பார்க்கலாம் என்றார் திரிஷா.

English summary
Actress Trisha Says " The Worst Act of Killing Street Dogs", Against Mohanlal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil