Don't Miss!
- Sports
ஐபிஎல் தொடர் மீது தான் ஆர்வம் இருக்கு.. இது நல்லது அல்ல.. இங்கிலாந்து ஜாம்பவான் வேதனை
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தமன்னா நடிச்சதுலயே இந்த ரோல் தான் அவருக்கு பிடிக்குமாம்.. அந்த கேள்வியை யாருமே கேட்கலையே?
சென்னை: மும்பை டிராபிக்கில் படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்த நிலையில், ரசிகர்கள் கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் நடிகை தமன்னா.
பிடித்த உணவு தோசை, என்றும் விரைவில் தமிழில் நடிப்பேன் என்றும் ஏகப்பட்ட ரசிகர்களின் கேள்விக்கு நச்சுன்னு பதில் அளித்துள்ளார்.
நீங்க நடிச்சதுலயே உங்களுக்கு பிடிச்ச ரோல் எது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தமன்னா அளித்த பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
என் மாமனார் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.. அண்ணாத்த பட துணை நடிகை சிவரஞ்சனா பரபரப்பு புகார்!

கேன்ஸ் அனுபவம் பற்றி
உலக அரங்கில் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமையாகவே கேன்ஸ் திரைப்பட விழாவை பார்க்கிறேன் என்றும் அதில் தானும் ஒரு சிறு அங்கமாக கலந்து கொண்டது பெரும் சந்தோஷத்தை கொடுக்கிறது என நடிகை தமன்னா ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மேலும், மும்பை மழையில் டிராபிக்கில் செல்லும் போது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடிய தமன்னா இந்த நேரத்தில் 'அடடா மழைடா' பாடலுக்கு நடனம் ஆடினால் சூப்பராக இருக்கும் என்றார்.

நீங்க பண்ண சிறந்த விஷயம்
இந்த 2022ல் நீங்க பண்ண சிறந்த விஷயம் என்றால் எதை சொல்லுவீங்கன்னு ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இனிமேல் நான் செய்யப் போவது என சூப்பரா சொல்லி ஸ்கோர் செய்தார் தமன்னா. மேலும், சமீபத்தில் F3 படத்தில் ஆணாக நடித்தது ரொம்பவே கஷ்டமான விஷயம் என்றும் ரசிகர்கள் கேள்விக்கு செம க்யூட்டாக பதில் அளித்து வந்தார்.

பிடித்த ரோல்
மற்றொரு ரசிகர் நீங்க நடித்ததிலேயே உங்களுக்கு ரொம்பவே பிடித்த ரோல்னா எதை சொல்லுவீங்க என்று கேட்டதும் உடனடியாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த தர்மதுரை சுபாஷினி கதாபாத்திரம் ரொம்பவே பிடிக்கும் என்றார். அடுத்ததாக இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் தான் நடித்த இளவரசி அவந்திகா கதாபாத்திரமும் மனதை கவர்ந்த கதாபாத்திரம் என தமன்னா கூறியுள்ளார்.

அந்த கேள்வியை கேட்கல
விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா? என்றோ நீங்க எப்போ திருமணம் செய்து கொள்ளப் போறீங்கன்னோ நல்ல வேளை யாருமே கேட்கல என சிலர் ரசிகர்களே கமெண்ட் அடித்திருப்பது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. விஷாலின் ஆக்ஷன் படத்துக்கு பிறகு தமிழில் ஒரு படம் கூட தமன்னா நடிக்கவில்லை. தெலுங்குல் ஒரு டஜன் படங்களும் இந்தியில் அரை டஜன் படங்களும் நடித்து வருகிறார்.