»   »  வடபோச்சே... தோழா வெற்றியால் நொந்து நூடுல்ஸ் ஆன ஸ்ருதி!

வடபோச்சே... தோழா வெற்றியால் நொந்து நூடுல்ஸ் ஆன ஸ்ருதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தோழா பட வெற்றியால் ஸ்ருதி ஹாசன் சற்று வருத்தத்தில் இருக்கிறாராம்.

தோழா பட வெற்றிக்கும் ஸ்ருதிக்கும் என்ன சம்பந்தம்? அப்படம் வெற்றி பெற்றால் ஸ்ருதி ஏன் வருத்தப்பட வேண்டும் என குழப்பமாக இருக்கிறதா?

தோழாவிற்கும், ஸ்ருதிக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆம், தோழா படத்தில் ஸ்ருதி நடித்திருக்க வேண்டியது. பல்வேறு காரணங்களால் அப்படம் தமன்னா கைக்கு மாறியது.

தோழா...

தோழா...

வம்சி இயக்கத்தில் நாகார்ஜூன், கார்த்தி நடித்த தோழா படம் கடந்தவாரம் ரிலீசானது. இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் ரிலீசாகியுள்ளது.

ஸ்ருதி...

ஸ்ருதி...

இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமானவர் ஸ்ருதி தான். சிலப்பல காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதி.

காரணங்கள்...

காரணங்கள்...

சம்பளப் பிரச்சினை தான் ஸ்ருதியின் இந்த முடிவுக்குக் காரணம் என்றும், தமிழில் கிடைத்த அஜித் பட வாய்ப்பு தான் காரணம் என்றும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் தனது கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என ஸ்ருதி கருதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமன்னா...

தமன்னா...

இது தொடர்பான பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சென்றது. அங்கு சுமூகமாகப் பேசி பிரச்சினை தீர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் தமன்னா இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பேசப்படும் கதாபாத்திரம்...

பேசப்படும் கதாபாத்திரம்...

ஆனால், தற்போது தோழாவில் தமன்னாவின் கதாபாத்திரமும், அவரது ஆடைகளும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. படம் முழுவதும் வரும் வகையில் அவரது கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது.

ஏமாற்றிய வேதாளம்...

ஏமாற்றிய வேதாளம்...

அஜித்தின் ஜோடியாக வேதாளம் படத்தில் நடித்த போதும், அப்படத்தில் ஸ்ருதியை விட அதிகம் பாராட்டுகளை அள்ளியவர் லட்சுமிமேனன் தான். இதெல்லாம் தான் ஸ்ருதியின் மனவருத்தத்திற்கு காரணம் என்கிறார்கள்.

வெற்றி...

வெற்றி...

எது எப்படியோ, ஸ்ருதியின் விலகலால் இந்த வாய்ப்பு தமன்னா கைக்கு மாறியது. தற்போது படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

English summary
Sources said that actress Shruti is sad as the thozha movie is running successfully in theater.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil