இனிமே கிளாமர் ரூட் இல்லை போல.. விநாயகர் சதுர்த்தியை இலக்கியா எப்படி கொண்டாடி இருக்காரு பாருங்க!
சென்னை: டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா அந்த ஆப் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆபாசமான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ஏகப்பட்ட இளைஞர்களை ஃபாலோயர்களாக மாற்றினார். திடீரென சண்டை பயிற்சி இயக்குநர் திலீப் சுப்புராயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தனது சாவுக்கு அவர் தான் காரணம் என பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து திலீப் சுப்புராயன் மற்றும் இலக்கியா தரப்புக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், தற்போது தற்கொலை முயற்சிகளையெல்லாம் கைவிட்டு விட்டு யூடியூபில் சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமர்க்களமாக தனது வீட்டில் பெரிய சைஸ் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்திய புகைப்படங்களை எல்லாம் இலக்கியா ஷேர் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் இப்போதான் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு என லைக் போட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: நடிகை சிம்ரன் தனது கணவருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். பாலிவுட்டில் அனன்யா பாண்டே, ஹன்சிகா என ஏகப்பட்ட பிரபலங்கள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். நிக்கி கல்ராணி, ஹரிஷ் கல்யாண் என ஏகப்பட்ட பிரபலங்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தனுஷின் இட்லி கடை செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் உள்ளிட்ட படங்களின் டீசரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியானது.
இலக்கியா வீட்டு விநாயகர் சதுர்த்தி: இந்நிலையில், கவர்ச்சி நடிகை என ரசிகர்களால் அறியப்பட்ட நடிகை இலக்கியா திடீரென ஆளே டோட்டலாக ஆன்மிகவாதியாக மாறி வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். சன்னி லியோன், கிரண் உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகளும் விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் பக்தி பரவசமாக மாறிவிடுவார்கள். சமீப காலமாகவே கிளாமர் ரூட்டுக்கு குட் பை சொல்லி விட்டு சமையல் வீடியோக்களை போட்டு வரும் இலக்கியா கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி ரசிகர்களின் கவனத்தை அதிகமாகவே ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











