»   »  மாப்பிள்ளை வருண் மணியனுக்கு 'நோ' சொன்ன த்ரிஷா

மாப்பிள்ளை வருண் மணியனுக்கு 'நோ' சொன்ன த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய வருங்கால கணவர் வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் நடிக்க த்ரிஷா மறுத்துவிட்டாராம்.

த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகிய பிறகும் அவருக்கு மவுசு குறையவில்லை. புதிய பட வாய்ப்புகள் அவரது வீட்டுக்கு கதவை தட்டுகின்றன. அவரும் தனக்கு பிடித்த கதைகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறார்.


இத்தனை காலம் இல்லாமல் திகில் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


வருண் மணியன்

வருண் மணியன்

ஜெய்யை வைத்து த்ரிஷாவின் வருங்கால கணவர் வருண் மணியன் ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு த்ரிஷாவை தான் கேட்டிருந்தார்கள்.


யோசனை

யோசனை

ஜெய் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்ற யோசனையில் த்ரிஷா இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.


த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவின் கை நிறைய படங்கள் இருப்பதால் வருண் தயாரிக்கும் படத்திற்கு டேட்ஸ் ஒதுக்க முடியவில்லையாம். இதனால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டாராம்.


திருமணம்

திருமணம்

ஜெயம் ரவியுடன் தான் நடித்த பூலோகம் படத்தின் ரிலீஸுக்காக த்ரிஷா காத்திருக்கிறார். த்ரிஷாவுக்கு இன்னும் திருமணத் தேதி நிச்சயம் ஆகவில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகும் தான் தொடர்ந்து நடிக்கப் போவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Trisha has reportedly backed out of Jai's upcoming movie to be produced by her fiancee Varun Manian.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil