»   »  தோழி நயனுக்கு அடித்த ஜாக்பாட் த்ரிஷாவுக்கும் அடிக்குமா?

தோழி நயனுக்கு அடித்த ஜாக்பாட் த்ரிஷாவுக்கும் அடிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா நடித்துள்ள பேய் படமான நாயகி வரும் 16ம் தேதி ரிலீஸாகிறது.

கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள பேய் படம் நாயகி. நாயகி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ரிலீஸாகிறது. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது.


நாயகி வரும் 16ம் தேதி வெளியாக உள்ளது.


பேய்

பேய்

த்ரிஷா ஏற்கனவே அரண்மனை 2 பேய் படத்தில் நடித்து வெற்றி கண்டிருந்தார். இதையடுத்து தான் மீண்டும் பேயாக நடிக்க விரும்பிய த்ரிஷாவை தேடி வந்தது நாயகி வாய்ப்பு.


தேனாண்டாள் பிலிம்ஸ்

தேனாண்டாள் பிலிம்ஸ்

பேய் படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் தான் நாயகியின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்துள்ள இந்த படம் தமிழகத்தில் 200 தியேட்டர்களில் வெளியாகிறது.


கோலிவுட்

கோலிவுட்

கோலிவுட் ரசிகர்கள் கொஞ்ச காலமாகவே பேய் மோகம் பிடித்து திரிகிறார்கள். எந்த பேய் படம் வந்தாலும் தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாக்காமல் விடுவது இல்லை என்ற முடிவோடு உள்ளனர். இந்நிலையில் தான் நாயகி ரிலீஸாகிறது.


நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நாயகிகள் பேய் படங்களில் நடிக்க காரணம் உள்ளது. பேய் படங்களில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் துணிந்து நடிக்கிறார்கள். நயன்தாரா நடித்த மாயா பேய் படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Trisha's horror movie Nayaki is hitting the screens this friday. Trisha has already tasted success with horror film Aranamanai 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil