»   »  பாலிவுட்டை அடுத்து மல்லுவுட் போகும் த்ரிஷா: ஹீரோ உங்களுக்கு தெரிந்தவர் தான்!

பாலிவுட்டை அடுத்து மல்லுவுட் போகும் த்ரிஷா: ஹீரோ உங்களுக்கு தெரிந்தவர் தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா முதன்முதலாக மலையாள படத்தில் நடிக்க உள்ளார் அதுவும் இளம் ஹீரோ நிவின் பாலி ஜோடியாக.

த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நடுவில் கொஞ்சம் தொய்வடைந்தாலும் அவரது கெரியர் தற்போது டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் த்ரிஷா மல்லுவுட் செல்கிறார்.

நிவின் பாலி

நிவின் பாலி

ஷ்யாமாபிரசாத் இயக்கும் மலையாள படத்தில் பிரேமம் பட ஹீரோ நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. இது த்ரிஷா நடிக்கும் 60வது படமாகும்.

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி

தமிழில் அரவிந்த்சாமியுடன் சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இது தவிர என்.ஹெச். 10 இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான கர்ஜனை, மோகினி, விஜய் சேதுபதி படங்களும் த்ரிஷா கைவசம் உள்ளன.

த்ரிஷா

த்ரிஷா

நிவின் பாலியுடன் சேர்ந்து மலையாள படத்தில் நடிக்க உள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். த்ரிஷா ஏற்கனவே பாலிவுட் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோகம்

சோகம்

தனக்கு மிகவும் பிடித்த நபரான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து த்ரிஷா சோகத்தில் உள்ளார். அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத வருத்தம் வேறு.

English summary
Trisha is going to Mollywood and the hero of her debut movie is none other than Nivin Pauly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil