»   »  வேலையில்லா கோழை எங்க போனை ஹேக் செய்துட்டான்: த்ரிஷா, ஹன்சிகா

வேலையில்லா கோழை எங்க போனை ஹேக் செய்துட்டான்: த்ரிஷா, ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் த்ரிஷா மற்றும் ஹன்சிகா ஆகியோரின் போன்களை யாரோ ஹேக் செய்து அதில் இருந்த தொடர்பு எண்களை எல்லாம் அழித்துவிட்டனர்.

பிரபலங்களின் போன்கள் ஹேக் செய்யப்படுவது புதிது அன்று. இந்நிலையில் நடிகைகள் த்ரிஷா மற்றும் ஹன்சிகா ஆகியோரின் போன்களை யாரோ ஹேக் செய்துள்ளனர்.

தங்களின் போன்கள் ஹேக் செய்யப்பட்டது குறித்து அவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

த்ரிஷா

என் செல்போன் எண் தெரிந்த ட்வீப்ஸ் மற்றும் நண்பர்கள் தயவு செய்து உங்களின் பெயருடன் தொடர்பு எண்ணை எனக்கு வாட்ஸ்ஆப் செய்யவும். ஏனென்றால் யாரோ வேலையில்லா கோழை என் போனை ஹேக் செய்து அனைத்தையும் அழித்துவிட்டார்.

சைபர் கிரைம்

உங்களை சைபர்கிரைம் அதிகாரிகள் மற்றும் கர்மா மூலம் நன்றாக கவனித்துக் கொள்ளப்படும். நான் இவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

ஹன்சிகா

த்ரிஷாவின் ட்வீட்டை பார்த்த ஹன்சிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கும் அதே தான் நடந்துள்ளது. தயவு செய்து உங்கள் பெயருடன் டெக்ஸ்ட் செய்யவும் என தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில்

ஒரே நாளில்

ஒரே நாளில் யாரோ ஹன்சிகா மற்றும் த்ரிஷாவின் செல்போன்களை ஹேக் செய்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actresses Trisha and Hansika's phones have been hacked and their contacts are deleted. The two leading ladies took to twitter to inform this.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil