»   »  த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா சேர்ந்து நடிக்கும் 'போகி'... 3 பெண்களைப் பற்றிய கதை!

த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா சேர்ந்து நடிக்கும் 'போகி'... 3 பெண்களைப் பற்றிய கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போகி என்ற புதிய படத்தில் த்ரிஷா, ஓவியா மற்றும் பூனம் பாஜ்வா இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது.

அருண்குமார், மந்த்ரா நடித்த ப்ரியம் படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கும் புதிய படம் தான் இந்த ‘போகி'. எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்கள் பற்றிய கதைதான் படத்தின் மையக்கரு. அந்த மூன்று பெண்களாக த்ரிஷா, ஓவியா மற்றும் பூனம் பாஜ்வா நடிக்க உள்ளனர்.

'என்னை அறிந்தால்', 'பூலோகம்', 'அப்பா டக்கரு', 'லயன்', 'ரம்' என ஏற்கனவே த்ரிஷா கை நிறைய படங்களுடன் இருக்கிறார். இதில், என்னை அறிந்தால் படம் இவ்வாரம் ரிலீசாகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், நடிகை த்ரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு த்ரிஷா நடிப்பதை நிறுத்தி விடுவார் என தகவல்கள் வெளியாயின. ஆனால், 'போகி' படத்தின் அறிவிப்பு த்ரிஷா மீண்டும் நடிப்பார் என்பதை உறுதியாக்கி இருக்கிறது.

'விரைவில் 'போகி' படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக' தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Trisha Krishnan, who got engaged a couple of weeks back, is excited to resume work on her next Telugu-Tamil bilingual Bhogi
Please Wait while comments are loading...