ஏணியா? பாம்பா?.. திரிஷாவின் ’பரமபதம் விளையாட்டு’.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள பரமபதம் விளையாட்டு படம் இம்மாதம் 28ம் தேதி திரைக்கு வருகிறது.
திருஞானம் இயக்கத்தில் திரிஷா, நந்தா, ஏ.எல். அழகப்பன், வேல ராமமூர்த்தி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், வரும் பிப்ரவரி 28ம் தேதி ரிலீசாகிறது.

என்ன ரோல்?
பரமபதம் டைட்டில், தற்போது பரமபதம் விளையாட்டு என மாறியுள்ளது. இந்த படத்தில் நடிகை திரிஷா, டாக்டர் ரோலில் நடித்துள்ளார். காயத்ரி எனும் பெயரில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் திரிஷா நடித்துள்ளார். இமைக்கா நொடிகள், தர்பார் படங்களில் நடித்த பேபி மானஸ்வி இந்த படத்தில் திரிஷாவுக்கு மகளாக நடித்துள்ளார்.

என்ன கதை?
இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் த்ரில்லர் படமாக பரமபதம் விளையாட்டு உருவாகி உள்ளது. திரிஷா பணிபுரியும் மருத்துவமனையில் நடைபெறும் அரசியல்வாதியின் கொலைக்கு சாட்சியாக திரிஷா முன் வருவதும், பின்னர், திரிஷாவை பரமபத விளையாட்டில் பாம்புகள் தொடர்வது பல பிரச்சனைகள் சூழ்ந்து கொள்வதும், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் படத்தின் கதையாம்.

ரிலீஸ் பிரச்சனை
நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள பரமபதம் விளையாட்டு, கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி கடந்த ஜனவரி 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னரும், ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போய், தற்போது வரும் 28ம் தேதி நிச்சயம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது..

ஷூட் ஓவர்
ஏ.ஆர். முருகதாஸ் கதையில், எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ராங்கி படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. பரமபதம் விளையாட்டு திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில், விரைவில் ராங்கி படமும் திரைக்கு வரும் என தெரிகிறது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங், தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ராங்கி பட ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ள நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார்.

செம்ம பிசி
96 படத்திற்கு பிறகு நடிகை திரிஷா பயங்கர பிசியாகி உள்ளார். தமிழில், திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு, ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் ராம் படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். அப்படியே நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் அந்த சதுரங்க வேட்டை 2 படமும் ரிலீசானால், திரிஷா பயங்கர சந்தோஷத்தில் மிதப்பார்.


Click it and Unblock the Notifications











