»   »  சுருதிஹாசன், லட்சுமி மேனன் வரிசையில் இணைந்த திரிஷா

சுருதிஹாசன், லட்சுமி மேனன் வரிசையில் இணைந்த திரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:நாயகி படத்தில் ஒரு பாடலைப் பாடுவதன் மூலம் சுருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகளின் வரிசையில் இணைந்திருக்கிறார் திரிஷா.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாடல் பாடுவது, சொந்தக்குரலில் டப்பிங் பேசுவது போன்ற செயல்களில் நடிகைகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இதில் நயன்தாரா, திரிஷா, சமந்தா, தமன்னா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு சொந்தமாக குரல் கொடுத்து வருகின்றனர்.


Trisha Turns Singer in Nayagi

சுருதிஹாசன், ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோர் பின்னணிப்பாடகியாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷாவும் இந்தப் பாடகிகள் வரிசையில் இணைந்திருக்கிறார்.தான் நடித்து வரும் நாயகி படத்தில் ஒரு பாடலை திரிஷா பாடவிருக்கிறார். இந்தப் பாடல் படத்தில் 3 நிமிடங்கள் இடம்பெறும்.


ஏற்கனவே திரிஷாவை 20 வயதுப் பெண்ணாக நடிக்க வைத்து இப்படத்தை இயக்குநர் கோவி உருவாக்கி வருகிறார்.


இந்நிலையில் திரிஷா ஒரு பாடலையும் பாடுவது படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.


13 வருடங்களுக்கும் மேலான திரை வாழ்க்கையில் திரிஷா பாடும் முதல் பாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Trisha Turns a Singer in Nayagi Movie.She has Sung a 3 Minute Song in this Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil