»   »  சதுரங்க வேட்டை, சாமி 2, என்.எச்10, மோகினி... மீண்டும் பிஸியான த்ரிஷா!

சதுரங்க வேட்டை, சாமி 2, என்.எச்10, மோகினி... மீண்டும் பிஸியான த்ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்னமும் அப்படியே இருப்பவர் த்ரிஷா. இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே காணாமல் போய்விடும் ஹீரோயின்களுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னணி ஹீரோயினாகவே வலம் வருகிறார்.

இப்போது கூட தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த கொடி இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகவிருக்கிறது.

Trisha, very busy in Tamil

நன்றாகப் போய்க்கொண்டிருந்த கேரியரில் இந்த நாயகி படம் வந்தாலும் வந்தது சில காலம் பரபரப்பில்லாமல் இருக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது திரும்ப பிஸியாகி இருக்கிறார்.

சதுரங்க வேட்டை 2 வில் அரவிந்த்சாமியுடனும், சாமி 2 வில் விக்ரமுடனும் ஜோடியாக நடிப்பவர், அடுத்து நடிப்பது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த என்.எச் 10 படத்தின் ரீமேக்கில். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. மாதேஷின் மோகினியிலும் த்ரிஷாதான் நாயகி.

இதுதவிர தியாகராஜன் தயாரிப்பில் ரேவதி இயக்கத்தில் குயின் ரீமேக்கிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

English summary
Once again Trisha is very busy in Tamil cinema with 5 movies with leading actors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil