»   »  ‘நயன்’தாராவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் ‘திரி’ஷா...!

‘நயன்’தாராவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் ‘திரி’ஷா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது நெருங்கிய தோழியான நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் நடிகை திரிஷா.

நடிகைகள் என்றாலே அவர்களுக்குள் ஈகோ பிரச்சினை இருக்கும் என்ற பரவலான கருத்து உள்ளது. இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால், அவர்களுள் படத்தில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது என்ற விசயத்தில் பெரிய போராட்டமே நடைபெறும்.

ஆனால், இவைகளில் இருந்து வேறுபட்டுள்ளார் நடிகை திரிஷா.

அஞ்சலியுடன் அப்பாடக்கர்...

அஞ்சலியுடன் அப்பாடக்கர்...

திரிஷா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக சகலகலா வல்லவன் அப்பாடக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக அஞ்சலியும் நடித்துள்ளார்.

அனுஷ்காவுடன்...

அனுஷ்காவுடன்...

இதேபோல், அஜீத்துடன் திரிஷா சேர்ந்து நடித்த என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவும் நடித்திருந்தார். தற்போது அரண்மனை 2 படத்தில் ஹன்சிகாவுடன் சேர்ந்து நடித்து வருகிறார் திரிஷா.

நயன்தாராவுடன்...

நயன்தாராவுடன்...

இந்நிலையில், எதிர்காலத்தில் இது போல் வேறு எந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்ற கேள்விக்கு, ‘நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க ஆசை' என திரிஷா பதிலளித்துள்ளார்.

என்னுயிர் தோழி...

என்னுயிர் தோழி...

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நயன்தாரா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

வெங்கட்பிரபுவின் முயற்சி...

வெங்கட்பிரபுவின் முயற்சி...

ஏற்கனவே, என்னையும் நயன்தாராவையும் வைத்து பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு முயற்சி செய்தார்' எனத் தெரிவித்துள்ளார்.

நோட் பண்ணிக்கோங்க டைரக்டர்ஸ்...!

English summary
"I want to act with Nayantara. Although few tried to bring us together, it did not materialise for various reasons. Even Venkat Prabhu with whom I teamed up with for Mankatha, keeps telling me that he wants to work with Nayan and me together," said Trisha in an interview.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil