»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil


கவர்ச்சியாக நடிப்பதில் தமிழ், தெலுங்கு என பாகுபாடு பார்ப்பதில்லை என்று த்ரிஷா கூறுகிறார்

ராசியில்லாத நடிகை என்று நடிக்க வந்தபோது பெயர் வாங்கிய த்ரிஷா இப்போது கோலிவுட்டின் பிசியானநடிகையாகி விட்டார்.

விக்ரமுடன் சேர்ந்து நடித்த சாமி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பின்பு, கால்ஷீட் புத்தகம்நிரம்பி வழியும் அளவுக்கு த்ரிஷா பெரிய ஆளாகி விட்டார்.

இப்போது விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா கலக்கியுள்ள கில்லி வெற்றிப் படமாகி விட்டதால், த்ரிஷா மேலும்பிசியாகி விட்டார்.

கில்லியைத் தொடர்ந்து திருப்பாச்சி என்ற படத்திலும் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷாநடிக்கவுள்ளாராம்.

விஜய்யின் பரிந்துரையின் பேரில் இந்தப் படம் த்ரிஷாவுக்குக் கிடைத்துள்ளதாம்.

தமிழ் மட்டுமல்ல, தெலுங்கிலும் த்ரிஷாதான் நம்பர் ஒன். வர்ஷம் என்ற படத்தின் மூலம் அவர் நம்பர் ஒன் ஆனகதையை நாம் முன்பே தெரிவித்திருந்தோம்.

பெரும்பாலும் நடிகைகள் தெலுங்குப் படங்களில் அதிக கவர்ச்சியாக நடிப்பார்கள்.

தமிழுக்கு வரும்போது சேலை கட்டி, அவசர கதி மகாலட்சுமியாக காட்சியளிப்பார்கள். குஷ்பு, மீனா, ரோஜாஎல்லாம் அப்படித்தான் நடித்தார்கள்.

இப்போது வர்ஷம் கதை இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக ஜெயம் ரவிநடிக்கிறார். திருமலை பட இயக்குனர் ரமணா தான் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் சுள்ளான் படத்தை ரமணா இயக்கி வருகிறார்.

இந்தப் படம் முடிந்ததும், வர்ஷம்படத்தின் ரீமேக் வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே த்ரிஷாவிடம் தெலுங்கில் காட்டிய அளவுக்கு தமிழில் கவர்ச்சி காட்டுவீர்களா, தமிழ் ரசிகர்களுக்குஓரவஞ்சனை காட்டுவீர்களா என்று கேட்டால்,

எனக்கு தெலுங்கு, தமிழ் என்று பாகுபாடு எல்லாம் கிடையாது.

தெலுங்கில் வர்ஷம் படம் சூப்பர் ஹிட் ஆனதற்குஎன்னுடைய கவர்ச்சியும் ஒரு காரணம்.

எனவே தமிழிலும் அதே அளவுக்கு கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil