சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !

சென்னை : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி.

இவர், தமிழ், தெலுங்கு என பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி தன்னுடன் நடித்த ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அது வைரலாகி வருகிறது.

மந்திரம் தந்திரம்

மந்திரம் தந்திரம்

சன் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக விறுவிறுப்பாக இருந்த தொடர் நந்தினி. நாகினி தொடருக்கு போட்டியாக இந்த தொடரில் அனகோண்டா பாம்பு ஆள் உயரத்திற்கு எழுந்து நின்று மிரட்டும், மேலும், இத்தொடரில் தெய்வ நம்பிக்கை, மந்திரம், தந்திரம் என எபிசோடுக்கு எபிசோடு திகில் நிறைந்ததாக இருக்கும்.

மாயா கதாபாத்திரத்தில்

மாயா கதாபாத்திரத்தில்

இந்த தொடரை நடிகை குஷ்பு தயாரித்தார். இயக்குனர் சுந்தர் சி இயக்கினார். இதில், ராகுல் ரவி கதாநாயகனாகவும், நித்யா ராம், மாளவி வேல்ஸ் இருவரும் ஹீரோயினாக நடித்திருந்தனர். இதில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை கீர்த்தி.

Recommended Video

Keerthy Suresh Lockdown குசும்பு | Teacherஐ கலாய்த்து Video | Annathe
ஜெய் தனுஷ்

ஜெய் தனுஷ்

கீர்த்தி திருமுருகன் இயக்கத்தில் உருவான, கல்யாண பரிசு என்ற தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு நாடக நடிகர் தான் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடரில் சஞ்சய் பரந்தாமன் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கர்ப்பகால போட்டோஷூட்

கர்ப்பகால போட்டோஷூட்

நடிகை கீர்த்தி கர்ப்பமாக தகவலை தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். மேலும், வளைகாப்பில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். தற்போது இவர், கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட விதவிதமான போட்டோக்களை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் கீர்த்தி. இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கீர்த்தி, பார்த்து கவனமா இருங்க என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X