இயக்குநரான வரலட்சுமி எடுத்த திடீர் முடிவு.. சரத்குமாருக்கு சளைக்காத மகள் என்பதை நிரூபித்தார்!
சென்னை: வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற திரில்லர் படம் மூலம் தனது முதல் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதோடு, தயாரிப்பாளராகவும் அவர் களமிறங்குகிறார். பாலாவின் 'தாரை தப்பட்டை' (2016) படத்திற்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியபோதுதான் தனக்கு இயக்கம் குறித்த ஆர்வம் ஏற்பட்டதாக வரலட்சுமி பேட்டியில் தெரிவித்தார்.
அதில், நான் நீண்ட காலமாகவே கதை எழுதி வருகிறேன். எனவே இயக்குநராகும் ஆசை திடீரென பேட்டியில் எடுக்கப்பட்டது இல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாகவே நான் ஒரு கதை குறித்து சிந்தித்து வந்தேன். அதில் சில மாற்றங்கள் செய்து, இப்போது அதை இயக்க முடிவெடுத்துள்ளேன். இயக்குநர் பாலா தான், என் முதல் குரு, நான் இயக்குநராவதற்காக அவர் நீண்ட காலமாகவே காத்திருந்தார். என் திருமணம் நடந்தபோது மகிழ்ச்சியடைந்ததை விட, இப்போது நான் இயக்க வருகிறேன் என்று சொன்னபோது பாலா சார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நடிகை வரலட்சுமி: இந்த ஸ்கிரிப்ட் பல வருடங்களாக என் மனதில் இருந்தது. இந்த கதை என்னைத் தவிர வேறு யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது என்று தோன்றியது. என் வாழ்க்கையில் நான் ஒரு இயக்குநராகவே இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது இயற்கை எடுத்த முடிவு. நான் படங்களில் நடித்தாலும், படப்பிடிப்பின் போது, நான் இயக்குநருக்கு அருகிலேயே இருந்து உதவி செய்வேன். இதனால், என் சொந்தப் படப்பிடிப்பில் அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த திரைப்படம் ஒரு சமூக செய்தியை உள்ளடக்கிய வலுவான பெண்ணை மையப்படுத்திய கதையாக இருக்கும். படத்தின் கதை என்ன என்பதை நான் சொல்வதை விட, என் படம் பேச வேண்டும்.
என் நீண்ட நாள் ஆசை: இந்த படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, நவீன் சந்திரா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இத்தகைய அனுபவமிக்க நடிகர்களிடம் கதை சொல்லும்போது, அது அவர்களுக்கு சுவாரஸ்யமாக இருப்பது ஒரு நல்ல உணர்வு. அப்போது தான் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்று தெரியும். சிறந்த நடிகர்கள் இருக்கும்போது, ஒரு இயக்குநராக எனது 80% வேலை முடிந்துவிடும். பிரகாஷ் சாரின் நடிப்புத் திறமை குறித்து நான் பேசத் தகுதியற்றவள். அவர் ஒரு ஜாம்பவான். ப்ரியாமணி ஒரு அற்புதமான நடிகை. நவீன் சந்திராவுடன் தெலுங்கில் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். அவர் எனக்கு ஒரு நண்பர், இந்தக் கதையை நான் அவரிடம் சொன்னதுமே, உங்களுக்கு நான் நிச்சயம் இசையமைப்பேன் என்றார்.
நடிகை எடுத்த முடிவு: தொடர்ந்து பேசிய நடிகை வரலட்சுமி, நடிகையாக சில படங்களில் நடித்து வருவதாகவும், அவற்றை முடித்துவிட்டு இயக்குநர் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறேன். நான் எனது படத்தை இயக்கும் நேரத்தில் நடிகையாக நடிக்க மாட்டேன் என்று பேட்டியில் நடிகை வரலட்சுமி அந்த பேட்டியில் பல விஷயத்தை பேசி உள்ளார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சொந்தக்குரலில் பேசி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டைக்கோழி 2, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் நடிகையாக இருந்தாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











