twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்குச் சாவடியில் நடிகை த்ரிஷாவுடன் மோதிய வாக்காளர்!

    By Shankar
    |

    Verbal clash between Trisha and a voter
    சென்னை: வாக்கு செலுத்துவதில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் உரிய வரிசையில் நின்றுதான் செலுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

    ஆனாலும் நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கும் விவிஐபிக்கள் என்பதால் அவர்கள் முதலில் போட்டுவிட்டுப் போகட்டும் என்று நினைப்பது சாதாரண வாக்காளர்களின் மனநிலை. அதிலும் நட்சத்திரங்கள் என்பவர்கள் மக்களை மகிழ்விப்பவர்கள். அதனால் அவர்களுடன் யாரும் சண்டைக்கு நிற்பதில்லை, பொதுவாக.

    இதையும் தாண்டி சிலர் சண்டைக்குப் போய் அசிங்கப்படுத்துவார்கள். அப்படி ஒரு சம்பவம் நேற்று சென்னை வாக்குச் சாவடியில் நடந்தது. இதில் மாட்டிக் கொண்டவர் முன்னணி நடிகை த்ரிஷா.

    நடிகை திரிஷாவின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. அவர் ஓட்டுப்போடுவதற்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிக்கு, நேற்று பிற்பகல் 1 மணிக்கு வந்தார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், பாட்டி சாரதா ஆகியோரும் வந்தார்கள்.

    அப்போது அந்த வாக்குச்சாவடியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. திரிஷா தனது தாயார், பாட்டி ஆகியோருடன் கியூவில் நிற்காமல், நேராக ஓட்டுப்போடும் அறையை நோக்கி சென்றார்.

    ஆங்கிலத்தில் 'லடாய்'!

    உடனே, கியூவில் நின்ற ஒரு வாக்காளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கியூவில் நின்று ஓட்டுப்போடும்படி திரிஷாவிடம் கூறினார். ஆனால் த்ரிஷா அதைப் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் அறைக்குள் செல்ல முயன்றார்.

    அப்போது திரிஷாவுக்கும், எதிர்ப்பு தெரிவித்த வாக்காளருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டார்கள்.

    உடனே எதிர்ப்பு தெரிவித்த வாக்காளர் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரியிடம் சென்று, திரிஷா மீது புகார் செய்தார். 'எல்லோரும் கியூவில் நின்று ஓட்டுப்போடும்போது, திரிஷா மட்டும் நேராக சென்று ஓட்டுப்போடலாமா?' என்று கேட்டார்.

    பாட்டிக்கு 'நோ க்யூ'

    உடனே அந்த போலீஸ் அதிகாரி, புகார் செய்த வாக்காளரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டார். அவர் அடையாள அட்டையை காண்பித்ததும், போலீஸ் அதிகாரி திரிஷாவிடம் சென்று, 'உங்கள் பாட்டி மூத்த குடிமகள் என்பதால், அவர் வரிசையில் நிற்க தேவையில்லை. ஆனால் நீங்களும், உங்கள் தாயாரும் வரிசையில் நின்றுதான் ஓட்டுப்போட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

    வேறு வழியின்றி திரிஷாவும், அவருடைய தாயாரும் சுமார் 20 நிமிடங்கள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டார்கள்.

    இருபது நிமிடம் த்ரிஷாவைப் பார்த்ததில் அந்த வாக்காளருக்கு ஒரு 'அல்ப திருப்தி'!

    அது சரி, கமல்ஹாசன், சூர்யா போன்ற பெரிய நடிகர்களே வரிசையில் காத்திருந்து சென்று வாக்களித்தபோது திரிஷாவும் கூட சற்று நின்று போயிருக்கலாமே!

    English summary
    Trisha clashed verbally with a voter when she was came to cast her vote in the election held on wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X