»   »  விஜய் 60: 'டான்ஸிங் ஹீரோ' விஜய்யுடன் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ்

விஜய் 60: 'டான்ஸிங் ஹீரோ' விஜய்யுடன் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவழியாக ரஜினிமுருகன் நாயகி கீர்த்தி சுரேஷை தங்கள் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது விஜய் 60 படக்குழு.

இது என்ன மாயம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷை தங்களது அடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்திட தயாரிப்பாளர்கள் பலரும் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இவரின் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்துவது போன்று விஜய் 60 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சென்றுவிட, நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் கடந்த மாதம் வெளியாகிய ரஜினிமுருகன் கீர்த்தியை பந்தா இல்லாத பக்கத்து வீட்டுப் பெண்ணாக பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

சின்ன சின்ன

சின்ன சின்ன

ரஜினிமுருகன் படத்தில் இவர் காட்டிய சின்ன, சின்ன ரியாக்ஷன்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற விளைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் உள்ளங்கவர்ந்த நாயகியாக கீர்த்தி மாறியிருக்கிறார்.

விஜய் 60

விஜய் 60

தெறி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 60 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடித்து 2 படங்கள் மட்டுமே வெளியான நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய்யுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் கீர்த்திக்கு கிடைத்திருக்கிறது.

டான்ஸிங் ஹீரோ

டான்ஸிங் ஹீரோ

சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விஜய்யை 'டான்ஸிங் ஹீரோ' என்று கீர்த்தி குறிப்பிட்டிருந்தார். அதே போல நிஜமாகவே அவருடன் டான்ஸ் ஆடும் வாய்ப்பு தற்போது அவருக்கு கிடைத்திருக்கிறது.

மிரட்டு

மிரட்டு

விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்த கீர்த்தி தற்போது தனுஷின் மிரட்டு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் படத்தின் நாயகி வாய்ப்பும் கிடைத்திருப்பது கீர்த்தி சுரேஷை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
Confirmed: Actress Keerthi Suresh Starring Opposite to Vijay in Vijay 60.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil