»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நலிவடைந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தென்னிந்திய நடிகர் சங்கம்அறிமுகப்படுத்தியுள்ளது. இத் திட்டத்தை அதன் தலைவர் விஜயகாந்த் இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் இன்று விழா நடந்தது. இதில் விஜயகாந்த் தவிர, நடிகர் சங்க நிர்வாகிகள்நெப்போலியன், காளை, மனோரமா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 50 பேருக்கு மாதந்தோறும் ரூ.300 உதவி வழங்குவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்தஓய்வூதியத் தொகை பின்னர் அதிகரிக்கப்படும் என விஜயகாந்த் தெவித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கள்ளச்சாராயம், கஞ்சா ஆகியவற்றிற்கு எதிராக மக்கள் ஒன்றுதிரளுகின்றனர். ஆனால், திருட்டு விசிடிக்களுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருப்பதால்தான் அவற்றைஒழிக்க முடியவில்லை. அரசு நினைத்தால்தான் இதை ஒழிக்க முடியும் என்றார்.

வயதான கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விஜயகாந்த்தெவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil