எவ்ளோ வயசானா என்ன?.. அப்பா மடியில் அமரும் சுகமே தனி.. சந்தோஷத்தில் ஸ்ரீதேவி.. பாவம் வனிதா!

சென்னை: பழம்பெரும் நடிகர் நாட்டாமை விஜயகுமார் குடும்பத்தினர் ரொம்பவே சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து வருகின்றனர். தனது மகன் அருண் விஜய்யை மட்டுமின்றி மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என அனைவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் விஜயகுமார்.

மாதவன், ஜீவா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஸ்ரீதேவி விஜயகுமார் திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிலையில், பல ஆண்டுகள் கழித்து தற்போது சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு வருகிறார்.

Vijayakumar s 82nd birthday Sridevi Vijayakumar shares a cutest photo
Photo Credit:

கியாரா அத்வானி எல்லாம் என்ன அழகு, எங்க ஸ்ரீதேவி தெரியுமா என மீம் எல்லாம் போட்டு ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், தனது அப்பா விஜயகுமார் மடியில் அமர்ந்திருக்கும் போட்டோவை சற்றுமுன் ஸ்ரீதேவி ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

அப்பா மடியில் ஸ்ரீதேவி: சமீபத்தில் விஜயகுமாரின் பேத்தி திருமணத்தில் எல்லாம் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக கூடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து சிலருக்கு வயித்தெரிச்சல் பரிதாபங்களே ஓடிக் கொண்டிருக்கும். அந்தளவுக்கு தொடர்ந்து அடிக்கடி குடும்பங்களாக கூடி விழாக்களில் பங்கேற்று வருகின்றனர். வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி என கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், தற்போது அப்பா விஜயகுமார் மடியில் அமர்ந்துக் கொண்டு ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

எத்தனை வயதானால் என்ன?: திருமணமாகி குழந்தைகளை பெற்று அவர்கள் வளர்ந்தாலும் எத்தனை வயதானால் தான் என்ன? அப்பாவின் மடியில் அமரும் போது மகள்களுக்கு கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட வர்ணனைகளை போட்டு பார்க்கவே சூப்பராக இருக்கு ஸ்ரீதேவி திருஷ்டி சுத்திப்போட்டுக்கோங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பாவம் வனிதா: பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் பேச்சைக் கேட்காமல் விவாகரத்து, அடுத்தடுத்து திருமணங்கள் என செய்து குடும்ப மானத்தையே கப்பலேற்றிவிட்டார் வனிதா என அவரை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒதுக்கி வைத்து விட்டனர். அவரையும் சீக்கிரமே குடும்பத்தில் சேர்த்துக் கொண்டால் நல்லா இருக்கும், அவர் தான் ரொம்ப பாவம் என சிலர் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

விஜயகுமார் பிறந்தநாள்: 1943ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்த நடிகர் விஜயகுமார் இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆரம்பத்தில் ஹீரோவாகவும், அதன் பின்னர் வில்லனாகவும் நடித்த விஜயகுமார் குணசித்ர கதாபாத்திரங்களில் தூள் கிளப்பினார். நாட்டாமை கதாபாத்திரம், நட்புக்காக படம் எல்லாம் என்றைக்குமே மறக்காது. உலகத்திலேயே ரொம்பவே பாதுகாப்பான இடம் என் அப்பாவின் தோள்கள் தான் என பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அருண் விஜய், ப்ரீத்தி விஜயகுமார் உள்ளிட்ட பலரும் விஜயகுமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X