»   »  பிரம்மச்சாரியை மடக்கும் விந்தியா

பிரம்மச்சாரியை மடக்கும் விந்தியா

Subscribe to Oneindia Tamil

வயசுப் பசங்க படத்தில் கவர்ச்சியை ஏகபோகமாய் காட்டி வயசுப் பசங்க முதல் முதியோர் பென்சன்வாங்குபவர்கள் வரை எல்லா வயதினரையும் பாரபட்சம் இல்லாமல் ஜொள் விட வைத்த விந்தியாவுக்கு அந்தப்படத்துக்குப் பின் புக் ஆன படங்களின் சூட்டிங் தொடங்கவேயில்லை.

விந்தியாவைப் பார்த்துவிட்டு அப்படியே அட்வான்ஸ் கொடுத்துவிட்டுப் போன தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் அப்புறம் வீட்டுப் பக்கமே வரவில்லை. இதனால் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக இவர் நடிக்க இருந்தகற்றது காதலளவு உள்பட பல படங்கள் பூஜையோடும், ஸ்டில் செஷசன் நடத்தியதோடும் அப்படியே நிற்கின்றன.

இவர் நடித்த சேட்டை படத்தின் சூட்டிங் ஒரு வழியாய் முடிந்துவிட்டாலும் வாங்க ஆளில்லாமல் பெட்டியில்கும்பகர்ண அவதாரம் எடுத்து படுத்துள்ளது.

நன்றாக நடித்தாலும் ஏற்க மறுக்கிறார்கள், கவர்ச்சி காட்டினாலும் மார்க்கெட் கிடைக்கவில்லை என்று நொந்துபோயிருந்த விந்தியாவுக்கும் அவருக்குத் துணையாக இருந்த மேனேஜருக்கும் இடையே மனஸ்தாபம் வேறுவந்துவிட்டது.

இதையடுத்து அவரை வெட்டிவிட்டுவிட்ட விந்தியா, கமிஷன் அடிப்படையில் இப்போது சிலரை நியமித்துள்ளார்.தனக்கு சான்ஸ் பிடித்துத் தந்தால் கிடைக்கும் ஊதியத்தில் ஒரு பங்கை வெட்டுவாராம்.

அப்படி, இப்படி கஷ்டப்பட்டதன் பலனாக விந்தியாவைத் தேடி புதுப் பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. வயசுப்பசங்களை வச்சுத் தான் இந்த அட்வான்ஸ் தர்றோம். ஸோ, அந்த பட லெவலுக்கு நடிக்க வேண்டும் என்றகண்டிசனுடன் கிடைத்திருக்கும் அந்தப் படத்தின் பெயர் ஒரு பிரம்மச்சாரியின் கனவு.

காமெடிப் படம் என்கிறார்கள். ஆனாலும், படத்தின் டைட்டிலையும் விந்தியாவையும் சேர்த்துப் பார்த்தால் விஷயம்புரிந்துவிடும்.

பெஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நடிக்கிறார் விந்தியா. இவர்தவிர, மலையாளத்தில் பொடிப் பொடி ரோல்களில் திறமை காட்டும் அபிதாவையும், டண்டனக்கா டான்ஸ் புகழ்லேகாஸ்ரீ, புதுமுகங்களான ப்ரீத்தி வர்மா, ஜரீனா ஆகியோரையும் சேர்த்திருக்கிறார்கள்.

ஏவி.எம்மில் பூஜையுடன் சூட்டிங் தொடங்கியது. ஊட்டி, தஞ்சாவூர், ஏற்காட்டில் அடுத்த ஷெட்யூலாம்.

இசை முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் புதியவர்கள். இயக்குனர் பழையவர். தேவயானி- பார்த்திபனைவைத்து நினைக்காத நாளில்லை படத்தை எடுத்த ஸ்ரீஹரி தான் டைரக்ட் செய்கிறார்.

பிரம்மச்சாரியாக இருக்கும் லிவிங்க்ஸ்டனை விந்தியா எப்படி மடக்கிப் போடுகிறார் என்பதே கதையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil