»   »  சினிமாவை விட்டே விலக முடிவு செய்த ப்ரியா ஆனந்த்: அப்படி என்னம்மா ஆச்சு?

சினிமாவை விட்டே விலக முடிவு செய்த ப்ரியா ஆனந்த்: அப்படி என்னம்மா ஆச்சு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவை விட்டே போய்விடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் ப்ரியா ஆனந்த். சினிமா கெரியர் அவர் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாகப் போகவில்லை.

இதனால் அம்மணி வருத்தத்தில் உள்ளார்.

கூட்டத்தில் ஒருத்தன்

கூட்டத்தில் ஒருத்தன்

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ப்ரியா ஆனந்த். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ப்ரியா கலந்து கொண்டு பேசினார்.

சினிமா

சினிமா

நான் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருந்தேன். அதனால் சினிமாவை விட்டே விலகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து புதுப் பட வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தேன் என்றார் ப்ரியா.

படம்

படம்

சினிமாவை விட்டு விலக முடிவு செய்த நேரத்தில் கூட்டத்தில் ஒருத்தன் பட வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன் என்று ப்ரியா தெரிவித்தார்.

கிசுகிசு

கிசுகிசு

ப்ரியாவுக்கும் வாரிசு நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று மாதக் கணக்கில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து ஜோடியாக ஊர் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Priya Anand said that she got the opportunity to act in Kootathil Oruthan at a time she decided to quit cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil