»   »  'பல்லேலக்கா'-ஸாரி சொன்ன திரிஷா!

'பல்லேலக்கா'-ஸாரி சொன்ன திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Trisha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் இடம்பெற்றுள்ள பல்லேலக்கா பாட்டுக்கு ஆடுமாறு முதலில் திரிஷாவைத்தான் கேட்டார்களாம். ஆனால் அவர் மறுக்கவே பின்னர் நயனதாரா ஆடினாராம்.

சிவாஜி படம் குறித்த அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பு அப்படத்தில் திரிஷா நடிப்பார் என்றுதான் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திரிஷாவும் கூட அந்த நம்பிக்கையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களிலிருந்தும் அவர் விலகிக் கொண்டு கால்ஷீட்டுகளை ரெடி செய்து வைத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஷ்ரியா உள்ளே புகுந்து விட்டார். திரிஷாவை திராட்டில் விட்டு விட்டனர்.

இருந்தாலும், திரிஷாவுக்கு ஏமாற்றம் கொடுக்க வேண்டாமே என்று பல்லேலக்கா பாட்டுக்கு ரஜினியுடன் ஆடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்ற பாலிசியுடன் உள்ளேன், ஸாரி என்று கூறி அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறி விட்டாராம். இதன் பின்னரே பல்லேலக்கா, நயனதாராவுக்குப் போனது.

ரஜினி படமாகவே இருந்தாலும், சிங்கிள் பாட்டுக்கு எப்போதும் ஆடுவதில்லை என்ற பாலிசியில் படு தீவிரமாக இருக்கிறாராம் திரிஷா. ஆனால் இவருக்குப் போட்டியாக தமிழ் மற்றும் தெலுங்கில் பார்க்கப்படும் ஷ்ரியா, அப்படியே திரிஷாவுக்கு நேர் மாறாக இருக்கிறார்.

ரஜினி படத்தில் ஹீரோயினாகவும் நடிப்பேன், நல்ல துட்டு கொடுத்தால் வடிவேலுவுடன் சிங்கிள் பாட்டுக்கு ஆடவும் செய்வேன் என்று தைரியமாக வருகிற வாய்ப்புகளையெல்லாம் வாங்கி வாரிப் போட்டுக் கொள்கிறாராம்.

வடிவேலுவுடன் சிங்கிள் பாட்டுக்கு ஷ்ரியா ஆடியதைப் பார்த்து மேலும் சிலருடைய படங்களில் ஒத்தப் பாட்டு வாய்ப்பு ஷ்ரியாவைத் தேடி வந்துள்ளது. துட்டு பெரிதாக இருந்தால் ஆடலாம் என்றிருக்கிறாராம் ஷ்ரியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil