»   »  தீபிகா பற்றி கேட்டால் வடிவேலு மாதிரி 'ஆஹான்' என்ற கத்ரீனா கைஃப்

தீபிகா பற்றி கேட்டால் வடிவேலு மாதிரி 'ஆஹான்' என்ற கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர் என்பது தெரியுமா என்று கேட்டால் நடிகை கத்ரீனா கைஃப் வடிவேலு ஸ்டைலில் ஆஹான் என்று கூறியுள்ளார்.

ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி என தொடர் ஹிட் படங்கள் கொடுத்த தீபிகா படுகோனேவின் சம்பளம் எகிறிவிட்டது. அவர் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் நடிக்க ரூ.11 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது பாலிவுட்டின் அதிகம் சம்பளம் வாங்கும் நாயகி தீபிகா தான்.

கத்ரீனா

கத்ரீனா

கத்ரீனா கைஃபுக்கும், தீபிகாவுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம். காரணம் ரன்பிர் கபூர். இருவருமே அவரின் காதலிகளாக இருந்தவர்கள். ரன்பிர்-தீபிகா பிரிய கத்ரீனா காரணம் என்று கூறப்பட்டது.

தீபிகா

தீபிகா

தீபிகா-ரன்பிர் கபூர் அழகான ஜோடி என்று கூறப்பட்ட நிலையில் அந்த காதலை அத்துவிட்ட கத்ரீனாவை தீபிகா பின்னர் பழிவாங்கிவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. தற்போது ரன்பிர்-கத்ரீனா பிரிய தீபிகா தான் காரணம் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஆஹான்

ஆஹான்

உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர் என்பது தெரியுமா என்று கத்ரீனா கைஃபிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, ஆஹான். எனக்கு தெரியாதே என்று கூறிவிட்டார்.

பார் பார் தேக்கோ

பார் பார் தேக்கோ

சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஜோடி சேர்ந்து கத்ரீனா நடித்துள்ள பார் பார் தேக்கோ படம் நாளை ரிலீஸாகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. சித்தார்த், கத்ரீனா இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Deepika Padukone recently ranked number 10 in the list of highest paid actresses in the world. But it seems that her rival Katrina Kaif does not even care about it. According to Bollywood Life, Katrina Kaif was quizzed about Deepika Padukone making it to the list of highest paid actresses. She seemed surprised and said, "Is it? I wasn't aware of it".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X