என் மூச்சவ.. பேச்சவ.. டியூட் படத்தில் ரசிகர்களை கவர்ந்த கேமரா கேர்ள்.. யாரு இந்த ஐஸ்வர்யா ஷர்மா?
சென்னை: டியூட் படம் பார்ப்பதற்கு முன்னதாக என் மூச்சவ.. பேச்சவ.. என ரசிகர்கள் நடிகை மமிதா பைஜுவை பாடி கொண்டாடி வந்த நிலையில், படம் வெளியான பின்னர் சோஷியல் மீடியா முழுவதும் ரசிகர்களின் இமிடியேட் க்ரஷ்ஷாக மாறி நிற்பது நடிகை ஐஸ்வர்யா ஷர்மா தான். அதற்கான காரணத்தை டியூட் படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
இங்கே யாரு இந்த ஐஸ்வர்யா ஷர்மா என்றும் ரீல்ஸ் போட்டு வைரலான பொண்ணு இப்போ டியூட் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து விட்டாரே என்பது குறித்தும் பார்க்கலாம் வாங்க..

ஹீரோயினே கிடைக்கல: பிரதீப் ரங்கநாதன் ஆரம்பத்தில் நடிக்கும் போது தனக்கு ஹீரோயினாக நடிக்க ஹீரோயினே கிடைக்கல என புலம்பிக் கொண்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு படத்திலும் அவருக்கு குறைந்தது 3 ஹீரோயின்கள் இருப்பது போலத்தான் படங்களில் நடித்து வருகிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். டிராகன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் 3 ஹீரோயின்களுடன் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

யாரு இந்த ஐஸ்வர்யா ஷர்மா: டிராகன் படத்தில் கேமரா கேர்ளாக நடித்து மமிதா பைஜுவையே தனது அழகில் ஓரங்கட்டிய ஐஸ்வர்யா ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் ஐடியைத்தான் தற்போது பல ரசிகர்களும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வைரலான ஐஸ்வர்யா ஷர்மா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளிட்ட சில விளம்பரங்களில் மாடல் நடிகையாக நடித்து வந்த நிலையில், இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கேக் ஊட்டிவிட்ட பிரதீப்: டியூட் படத்தில் நடித்த அனுபங்களையும் அந்த படத்தில் தனக்கு கிடைத்த கேரக்டர் மற்றும் அதற்கு கிடைத்து வரும் ரெஸ்பான்ஸ் என சந்தோஷத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ஷர்மா இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ஹீரோயின் மமிதா பைஜு, பாரி ரோலில் நடித்த ஹ்ரிது ஹரூன் மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வைரலாக்கி உள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஐஸ்வர்யாவுக்கு கேக் ஊட்டுவதும் பதிலுக்கு இவர் அவருக்கு கேக் ஊட்டுவதும் போன்ற வீடியோவும் இன்ஸ்டாகிராமில் இருக்கு.
சீக்கிரமே ஹீரோயின்: சீக்கிரமே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாகவும் ஐஸ்வர்யா ஷர்மா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தவிர படத்தில் நேஹா ஷெட்டியும் பிரதீப் ரங்கநாதனின் எக்ஸ் லவ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் ஆரம்பத்திலேயே அவருடைய தாலியை அறுத்து கலாட்டா செய்யும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் வேறலெவல் அலப்பறை.


Click it and Unblock the Notifications











