»   »  விஜய்யுடன் 'ஒய் நாட்'?: கேட்கும் ரஜினி ஹீரோயின்

விஜய்யுடன் 'ஒய் நாட்'?: கேட்கும் ரஜினி ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விஜய் ஒரு சிறந்த நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

சல்மான் கானின் தபாங் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தனது தந்தையின் நண்பரான ரஜினிகாந்துக்கும் ஜோடியாக நடித்துவிட்டார்.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சோனாக்ஷி கூறுகையில்,

முருகதாஸ்

முருகதாஸ்

அகிரா படத்தில் என்னை ஹீரோவாக்கிய முருகதாஸ் சாருக்கு நான் என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர் தனது இயக்கத்தில் மீண்டும் நடிக்குமாறு அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

விஜய்

விஜய்

நான் முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிடே, அகிரா ஆகிய படங்களில் நடித்துள்ளேன். நான் விஜய்யின் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்களை பார்த்துள்ளேன். அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடன் நடிக்க தயக்கம் இல்லை.

மீம்ஸ்

மீம்ஸ்

நான் இன்று ஃபிட்டாக உள்ளேன். நான் யாருக்காகவும் ஃபிட்டாக நினைக்கவில்லை. முன்பு என்னை கிண்டல் செய்பவர்களை சில நேரம் திட்டுவேன், சில நேரம் அமைதியாக இருப்பேன். அமைதியாக இருப்பதே சிறந்தது என்பதை தெரிந்து கொண்டேன்.

லிங்கா

லிங்கா

நான் ரஜினி சாருடன் சேர்ந்து நடித்த லிங்கா படம் ஓடாததில் வருத்தம் இல்லை. அந்த படம் மூலம் சில அருமையான நபர்களுடன் சேர்ந்து பணியாற்றினேன். முதல் தமிழ் படத்திலேயே ரஜினி சார் ஜோடியாக நடிப்பது பெரிய விஷயம். அந்த படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டினார்கள் என சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Sonakhsi Sinha who made her debut in Kollywood with Rajini's Lingaa said that she is ready to act with Vijay.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil