»   »  ஒரேயொரு போஸ் கொடுத்து ரசிகர்களை கலங்க வைத்த த்ரிஷா

ஒரேயொரு போஸ் கொடுத்து ரசிகர்களை கலங்க வைத்த த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாயகி படத்திற்காக நடிகை த்ரிஷா புகைப்படத்திற்கு கொடுத்துள்ள ஒரு போஸ் பலரையும் அதிர வைத்துள்ளது.

திகில் படங்களை தேடித் தேடிப் பார்த்து ஹிட்டாக்கி வருகிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். இந்நிலையில் திகில் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார் த்ரிஷா. அவரது ஆசை நாயகி படம் மூலம் நிறைவேறியுள்ளது.


படத்தில் அவருக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்.


பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

நாயகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் த்ரிஷா ஹாயாக ஒரு நாற்காலியில் சாய்ந்தமேனிக்கு உட்கார்ந்து ஒரு கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் போஸ் கொடுத்துள்ளார்.


மறுபடியும் கத்தி

மறுபடியும் கத்தி

நாயகி படத்தின் புகைப்படத்தில் த்ரிஷா அழகான சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து ஒரு கையில் கோவிலுக்கு எடுத்துச் செல்லும் கூடையும், மறுகையில் சம்பந்தமே இல்லாமல் ஆளை போட்டுத் தள்ள உதவும் கத்தியையும் வைத்துக் கொண்டு இருக்கிறார்.


த்ரிஷாவா?

த்ரிஷாவா?

வழக்கமாக கையில் பூவோடு, முகத்தில் புன்னகையோடு போஸ் கொடுக்கும் த்ரிஷா இப்படியொரு வித்தியாசமான புகைப்படத்தில் வந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரத்தம் சொட்டும் கத்தியுடன் சிரித்தபடி வேறு உள்ளார். ஒய் திஸ் கொலவெறி த்ரிஷா?


நாயகி

நாயகி

த்ரிஷாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பது அவரின் மேனேஜர் கிரிதரின் ஆசை. அவரின் ஆசையை நிறைவேற்றி வைக்க தான் த்ரிஷா நாயகி படத்தில் நடிக்கிறார். ஆம், நாயகி படத்தின் தயாரிப்பாளர் கிரிதர் தான்.


விஜய்

விஜய்

இளைய தளபதி விஜய் தன்னிடம் பல காலம் பி.ஆர்.ஓ.வாக இருக்கும் பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் புலி படத்தில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற செல்வகுமாரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் இளைய தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Trisha's Nayagi movie stills have stunned fans as she posed with a butchering knife.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil