யாஷிகாவின் வெறித்தனமான ஒர்க்-அவுட்...லைக்ஸ் ஐ குவிக்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த், மாடலாக இருந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.இதன் மூலம் சினிமா வாய்ப்புக்களையும் பெற்றார். ஆரம்பத்தில் சிறு சிறு கவர்ச்சி ரோல்களில் நடித்து வந்த யாஷிகா, பிறகு இரண்டாவது நாயகியாக நடிக்க துவங்கினார்.

Yaashikas work out video goes wildfire in social media

சமீபத்தில் வெளியான 'கடமையை செய்' படத்தின் மூலம் ஹீரோயினாகி உள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்து, பலரின் பாராட்டையும் பெற்றார். அதுமட்டுமின்றி தற்போது அவர் 6 படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகாவிற்கு நிறைய ஃபேன்ஸ் உண்டு. தனது இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக கவர்ச்சி காட்டிய போட்டோஷுட் போட்டோக்களை வெளியிட்டு, லைக்குகளை அள்ளுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

கார் விபத்தில் மோசமாக காயமடைந்த யாஷிகா, அதற்கு பிறகு படுத்தபடுக்கையானார். அப்போதும் கூட தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டார் யாஷிகா. பிறகு குணமடைந்த பிறகு மீண்டும் கவர்ச்சி போட்டோஷுட், நடனம் என பல வீடியோ, போட்டோக்களை வெளியிட துவங்கி விட்டார்.

சமீபத்தில் பச்சை நிற பிகினியில் நீச்சல் குளத்தில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு கதிகலங்க வைத்தார்.இதைத் தொடர்ந்து கருப்பு உடையில் கிக்கேற்றும் அளவிற்கு செம ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டார். இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, 'இலக்கை அடைய வெறித்தனமான பிட்னஸ்' என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. கலக்குறீங்க யாஷிகா. ரோலக்ஸ் ஃபீமெயில் வெர்சன் பார்க்குற மாதிரி இருக்கு என பலரும் பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். அதே சமயம் சிலர், திடீரென எதற்காக இந்த வெறித்தனமான ஒர்க் அவுட்? ஒர்க் அவுட்டில் கூட இவ்வளவு கவர்ச்சியா? என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X